பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தமிழகத்து மறவர் குலங்கள் தமிழகத்திற்கு, ஆசிரியர் தொல்காப்பியனுர், வண் புகழ் மூவர் தண்பொழில் வன்,ரப்பு எனப் பெயர் சூட்டி யிருப்பதால், வேங்கடமலைக்கும் குமரிமுனேக்கும் இடைப் பட்ட இக்காட்டில், பண்டு, சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர் வழிவந்தார் மட்டுமே ஆட்சி புரிந்திருந்தனர் என அறுதியிட்டுக் கூறிவிடுதல் இயலாது. அம் மூவேந்தர் வாழ்ந்திருந்த அதே தமிழகத்தில், அதே காலத்தில், அவர் ஆட்சிக்கு அடங்கியும் அடங்காமலும் வேறு பல சிற்றரசர் களும் பெருவாழ்வு வாழ்ந்திருந்தனர். அவர் க ள், அம் மூவேந்தர்க்குரிய சேர, சோழ, பாண்டிய குலங்களிற் பிறந்த வரல்லர். "கல்தோன்றி மண் தோன்ருக் காலத்தே முன் தோன்றி மூத்தகுடி” என்றும், "படைப்புக்காலம் தொடங்கி மேம்பட்டுவரும் குடிகள்” என்றும் பாராட்டப் பெறும் பழம்பெருமை வாய்ந்த அம் மூவேந்தர் குடியோடு ஒத்த பழி மையும் பெருமையும் வாய்ந்த வேறு பல குடிகளும் தமிழ கத்தில் தழைத்திருந்தன. மூவேந்தர் குடியில் வந்த பேரரசர் களைப் போலவே, அப் பல்வேறு குடிகளில் வங்த அச் சிற்ற ரசர்களும் தமிழகப் பெருவாழ்விற்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளனர். அம்முடி மன்னர்களைப் போலவே, இக் குறுகிலத் தலைவர்களும் புலவர்களைப் புரங் து அவர்தம் பாராட்டைப் பெற்றுள்ளனர். பண்டைத் தமிழ்நாட்டு