பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s:4 'தமிழகத்தில் கோசர் பரத்தையர் ஒழுக்கம் கொண்ட பண்பிலாளன் என்ற அவன் பழியையும், கணவனேக் கணிகையர்பால் போக்கி விட்டமையால் இல்லறம் ஆற்றும் அரும்பயன் இழந்தவள் என்ற தன் பழியையும் போக்கியதோடு, கணவளுேடு கூடியிருந்து, அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம் பலும், துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர் கோடலும் ஆகிய இல்லறப் பயனே இனிது ஆற்றி, வாழ்வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வத் தோடு ஒப்ப மதிக்கும் ஒரு பெருகிலேயையும் அளித்த மகன் மீது ஆரா அன்பு கொண்டு அகம் நிறைந்து வாழ்ந்தாள். மறுநாள் தன் மனேக்கு வந்த தன் ஆருயிர்த் தோழி பால், "தோழி பகைவரும் விரும்பிப் பேரன்பு காட்ட வல்ல கல்லொழுக்க மிக்க நன்மகனப் பெற்றவர், இம் மையில் பழிங்ேகிப் புகழ் பெறுவர், வசை நீங்கி இசை பெறுவர்; மறுமையில், வீட்டுலகப் பெருவாழ்வு பெற்று விழுச்சிறப்பு எய்துவர் எனப் பெரியோர் பலர், பலநூறு ஆண்டுகளாகக் கூறிவரும் பழமொழியை நீ கேட்டிருப்பை, அது முழுக்க முழுக்க உண்மை என்பதை அறிந்து கொள் ஞம் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது எனக்கு” என்று கூறி, நெருகல் கடந்த நிகழ்ச்சியை நிரலே எடுத்துச் சொல்லி இன்புற்ருள். . பழந்தமிழ் மக்கள் வாழ்வில் காணலாம் மாண்புமிகு நிகழ்ச்சிகள் பலவற்றுள் ஒன்ருன இங்கிகழ்ச்சியை, இனிய ஒரு நிழற் படமாக்கி நமக்கு அளித்துச் சென்றுள்ளார் புலவர் செல்லூர்க்கோசனர்." 1. 'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் ம றுவின்று எய்துபர், - செறுநறும் விழையும் செயிர்தீர்காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்