பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழகத்தில் கோசர் றுக என் ஆணையிட்டு ஈ தல் இசைபட வாழ்தல் @T@冠” அப்புகழ் ஈட்டும் வழித்துறைகளையும் வகுத்துக் கூறிய வள்ளுவர் வாய்மொழியினே ஏற்றுக் கொண்டவர் அவ்விரு வரும் ஆதலின், புகழோடு வாழவேண்டும் என்றும், இவ் வுலக இன்பங்களுள் எதையும் இழந்துவிடாமல் எக்காலமும் பெற்றுப்பெருவாழ்வு வாழவேண்டும் என்றும், இம்மையில் பெறும் இப்பேரின்ப வாழ்வை மறுமையிலும் பெற்று நுகர வேண்டுமாதலின், அதைக் கொடுக்கவல்ல கொடைக் குணத் தில் குறை காட்டலாகாது என்றும் விரும்பினர்கள். அவ் வாறு விரும்பிய அவர்கள். அதற்குப் பொருளின் துணை இன்றியமையாதது ; அப்பொருளேப் பெருமளவில் பெருதவ ரால் அப் பெருவாழ்வைப் பெறுதல் அறவே இயலாது என்பதையும், அத்தகு பொருளேப் பெறவேண்டுமாயின் ஓயாது உழைத்தல் வேண்டும் ஊக்கம் ஒழிந்து உறங்கிக் கிடப்பவரால் அப்பொருளை அடைதல் ஆகாது என்பதையும் அறிந்திருந்தார்கள்; அவ்வுணர்வு இருவர் உள்ளத்தும் ஊற் றெடுத்துப் பெருகியதால், கனிஇளம் பருவத்தளாய அவளே விடுத்து கணிமிகச் சேய் காட்டிற்குப் போக அவனும் துணிக் தான்; அதற்கு அவளும் இசைந்தாள். பொருளின் இன்றி யமையாமை அவர்களைப் பிரியத் தூண்டுகிறது என்ருலும், நெடும் பிரிவை அவ்விருவர் உள்ளமும் தாங்காவாதல் அறிந்த அவ்விளைஞன், "என் பிரிவுக் துயரால், கின் கூக் தல வாரிமுடித்து, மலர் குட்டி மகிழவும் மனங்கொள் ளாது மயங்கிக் கிடப்பை என்பதை யான் அறிவேன்; ஆத லின் உன்னே அங்கிலேயில் கெடிதிருக்க விடாது, கார்ப் பருவம் தொடங்கியதுமே கடிது இவண் வந்து சேர்வன் வந்து, சின் கருங்கூந்தலில், வண்டுகள் வந்து மொய்க்குமாறு தம்மிடைக் துளிர்த்த தேன் புலராதிருக்கும் தகைமையவாய புத்தம்புது மலர்களைப் பறித்துச் சூட்டுவன்” என வஞ்சினம் காட்டும் வாய்மொழி வழங்கி விடைபெற்றுச் சென்ருன் -