பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர்குலப் புலவர்கள் 97 கடமையைக் கருத்தில் கொண்டும், காதலன் உரைத்த துடுஞ்குள் உரையை நினைந்தும் காத்திருந்தாள் அவள்; காலம் கழிந்தது; கார் காலமும் வந்துவிட்டது; வானத்தில் மின்னல் தள் கண்ணுெளி கெடுக்குமாறு காட்சி அளித்தன; தாதுகள் செவிடுபடுமாறு இடியோசை எழுந்தது; ஒளி கண் டும், ஒலி கேட்டும் வானே நிமிர்ந்து நோக்கிய அங்கங்கை ஆங்குக் கார்மேகங்கள் கொண்டல் கொண்டலாய்ப் படர்ந்து விரைவதையும் கண்டாள்; கார்காலம் வந்துவிட்டது என் பதை அறிந்துகொண்டாள், கலக்கம் பெரிதாயிற்று, கார் காலத் தொடக்கத்தில் வந்துவிடுவன் என்று கூறிய காதலன் வாளாகூறினைல்லன்; வஞ்சினம் உரைத்துக் கூறியுள் வான்; உரைத்த வஞ்சினம் வழுவுதல் கூடாது; வஞ்சினம் வழுவினுரைத் தெய்வம் வருத்தும், ஆகவே, காதலன் வாராமை கண்டு கொள்ளும் வருத்தத்தைக் காட்டிலும், வஞ் சினம் வழுவிய அவனுக்குக் தெய்வக்கேடு வந்துறுமோ என்ற கலகத்தால் பிறந்த வருத்தமே பெரிதும் வருத்துவ தாயிற்று. சென்ற நாடோ, சேணெடும் தொலைவில் உள் ளது; இடைவழியோ மேகங்கள் வந்து படியுமளவு உயர்ந்த மலேகள் மண்டிக் கிடக்கும் கொடுமை மிக்கது; அத்துணை நெடுமையும், கொடுமையும் மலிந்த வழியில், தெய்வம் வருத்த அவர் எவ்வாறு வருந்துவரோ என்று எண்ணி இடர் உற்ருள். பின்னர், அக்கொடுமையைத் தவிர்ப்பான் வேண் டிக் கடவுளிடம் குறையிறப்ப விரும்பினுள். ஆளுல், "தெய் வமே! என் கணவர் பொய்த்துவிட்டார்; ஆயினும் என் பொருட்டு அவரைக் கொடுமை செய்யற்க" எனக் கூறுமுகத் தான் கணவனேப் பிழைபுரிந்தாளுக்க அவள் உள்ளம் விரும்பவில்லை; கணவன் பிழைபுரியாதவன்; இப்போதும் பிழைபுரிந்திலன் என்றே வாதாட விரும்பிள்ை; அதனல் கார்காலத்து மேக எழுச்சி இது; இக்காலத்தில், மேகம் கண்ட கண்ட இடத்தில் எழும்; ஆகவே, ஈண்டு மேகம் t