பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I g (; . . தமிழகத்தில் கோசர் இக்காலுர்க் கோசர்குலக் கோமான்களேயல்லாமல் வேறு சில கோசர்குலக் குரிசில்களும் இருந்தனர். அன்னருள் கொடை, கொற்றம் ஆகிய இரண்டாலும் சிறந்து புலவர் பாராட்டும் பெருவாழ்வு வாழ்ந்திருந்தான் ஒருவன்; அவ சீனப் பற்றி அறியத்தகுவன. இவை: கோசரின் தொல்பெரும் குடியிருப்பு நாடாகிய கொங்கு காட்டில் ஈர்ந்துர் என்ற பெயருடையதொரு பேரூர் பண்டு இருந்தது; அது இன்று ஈஞ்சூர் எனும் பெயர்பூண்டு இயங்கு கிறது, அவ்வூரையும்.அவ்வூரைச் சூழ உள்ள சிறு கிலத்தை பும்உரிமை கொண்டு வாழ்ந்திருந்தான் ஒரு வீரன். ஆண்மை யும் ஆற்றலும் வாய்ந்த ஒரு பெரு வீரனுக விளங்கிய அவன் பாண்டி காட்டின் பகை நாடுகளுள் ஒன்ருகிய சேரநாட்டின் உட்பிரிவாம் கொங்கு நாட்டில் வாழ்ந்திருப்பக் கண்ட அக் காலே நாடாண்டிருந்த பாண்டிய மன்னன், அவனத் தன் படைத் தலைவனுகுமாறு வேண்டிக்கொண்டான். தன் குலத்தில் வந்த பலரும் பாண்டியர் படையிலேயே பணி புரிந்தமை கண்ட அவன், அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்டான்; பாண்டியன் அவனேப் படைத்தவனுக்கி, வழக்கம்போல் மாறன் எனும் பட்டப் பெயரும் குட்டிச் சிறப்பித்தான். அதனல் அன்று முதல் ஈர்க்துரர்கிழான் கோயன் மாறன் என அழைக்கப் பெற்ற அவன, பாண்டி யன் பொருட்டு போர்க்களம் பல புகுந்து வெற்றி பல பெற். றுத் தந்தான். போர்க்களங்தோறும் பகைவரின் வாளும் வேலும் பாய்ந்து பாய்ந்து அவன் மெய்ம் முழுதும் புண்க ளாகவே காட்சி அளித்தன; அப்புண்களெல்லாம் கோப் தீர்ந்து, மாருவடுக்களாக மாறி அம்மேனி வனப்பை அழித்து விட்டன. ஆயினும் நோய் தீர்க்கும் மருந்தாகிப் பயன்படவல்ல மரத்தை, மக்கள், காள்தோறும் வெட்டி வெட்டி வடுச்செய்துவிடினும், அம்மரத்தின் மாண்பு குறை யாது மேலும் மேலும் மிகுந்தே விளங்க மக்கள் அம்.