பக்கம்:தமிழக ஆட்சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம்-முறை-காவல்

95



வேண்டுகோளால் அறக்கோட்டம் ஆக்கப்பட்டது என்று மணிமேகலை காப்பியம் கூறுகிறது. பிற்காலத்திலும் சிறைகள்

இருந்தன.

ஒருவனைக் கொன்றவன் கொல்லப்பட்டவனுடைய :ஊர்க்கோவிலில் விளக்கெரிப்பதாக ஒப்புக் கொள்கிருன். இதற்குக் கொல்லப்பட்டவன் உறவினர்கள் இசையின், கொலையாளி தண்டனையின்றி விடப்படுவான். இதனைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் இருக்கின்றன.”

சில பகுதிகளில் கடுமையான குற்றங்களுக்குத் தண்டப் பணம் வசூலிக்கப்படும். ஒரு கன்னிப் பெண்ணைக் கெடுத் தவன் 108 பொன் தண்டம் கட்டவேண்டும் ; வேறு பெண் பிள்ளையைக் கெடுத்தவன் 32 பொன் தண்டம் செலுத்த வேண்டும் ; காதை அறுத்தவன் 16 பணம் கட்டவேண்டும் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. இச் செய்திகளை உணர்த்தும் கல்வெட்டுக்கள் சிலவுண்டு.”

காவற் படை

ஊர்களில் களவு முதலியன நடைபெருது காப்பது ஊர்க் காவலர் கடமை. ஊர்க்காவலரே இக்காலத்தில் போலீசார் எனப்படுகின்றனர். மதுரையில் சங்க காலத்தில் ஊர்க் காவலர் இருந்தனர். அவர்கள், அனைவரும் கண்ணுறங்கும் நடு யாமத்தில் நகரத் தெருக்களில் சுற்றி வருவர் ; புலி போலும் வீரமுடையவர் ; அஞ்சாமை மிக்கவர் : கள்வரின் சூழ்ச்சிகளை அறிந்தவர். குறி தவருது அம்பு எய்வதில் வல்லவர் ; மழையால் தெருவில் நீர் மிகுந்திருப்பினும், இருள் கவிந்து இருப்பினும், தம் கடமையைச் செய்வர். அவர்கள் கரிய நிறத்தினர் ; கரிய உடையினர். அவர்கள்

1. 48 of 1897 etc.,

2, E. I. 25. P. 238. . 3, Ins, of Pudukkottai State, 484, 913

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/102&oldid=573620" இலிருந்து மீள்விக்கப்பட்டது