பக்கம்:தமிழக ஆட்சி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

தமிழக ஆட்சி



கையில் வாள் பிடித்திருப்பர். அவர்கள் இடையில் நூலேணி இருக்கும் : காற்றினும் கடிதிற் செல்லும் கள்வரையும் கட்டிப் பிடிக்கும் வலிமை உடையவர் ‘ என்று மதுரைக் காஞ்சி தெரிவிக்கின்றது. சோழ நாட்டு நகரங்களில் இரவில் இடையாமத்தில் ஊர் காப்பவர் விளக்குடன் சென்று ஊரைக் காத்தனர் என்பது தெரிகிறது.”

சிற்றுார்களில் ஊர்க்காவலர் போலீஸ் வேலையைச் செய்து வந்தனர். இவ்வாறே நாடு என்னும் பெரும் பிரிவை நாட்டுக்காவலர் காத்து வந்தனர். இவர்கள் முறையே பாடி காவலர் என்றும் காடு காவலர் என்றும் கல்வெட்டுக்களில் பெயர் பெற்றனர். இவர்களுக்கு ஊரைச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டாரும் ஆண்டுக்கு இவ்வளவு நெல் என்று கொடுத்து வந்தனர். பல ஊர்களில் ஊரவையினர் இவர்களுக்கென்று நிலத்தைச் சொந்தமாக விட்டிருந்தனர். ஊர்க்காவல் அல்லது நாடு காவல் முறையே பரம்பரை வேலையாக இருந்து வந்தது. அக்காவலர் அரசத் துரோகம் செய்யின், வேலை போய்விடும் ; நிலமும் பறிக்கப்படும். ஊரார் காவலருக்குக் கொடுப்பது நெல் மட்டுமன்று. பராக்கிரம பாண்டியன் காலத்தில் நெல் விளையும் ஒவ்வொரு “மா நிலத்திலும் ஒரு கலம் நெல்லும், ஒவ்வொரு பாக்கு மரத்திற்கும் வீசம் பணமும், கரும்பு, மருக்கொழுந்து, இஞ்சி, வாழை விளையும் ஒவ்வொரு “மா” நிலத்திற்கும் 5 பணமும் ஒவ்வொரு வீட்டிற்கும் 2 பணமும் ஊர்க்காவலருக்குக் கொடுக்கப்பட்டன என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.”

ஊரின் அளவுக்குத் தக்கபடி ஊர்க்காவலர் சிலராயும், பலர்ாயும் இருத்து வந்தனர். திருவொற்றியூரில் 48 காவல் காரர் பணியாற்றி வந்தனர். விசய நகரத்தில் மட்டும். 12,000 நகரக்காவலர் இருந்தனராம்.

1. மதுரைக் காஞ்சி, வரி 632-647 2. புறநானூறு, செ. 37 3. 467 of 1921

4. 240 of 1912

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/103&oldid=573621" இலிருந்து மீள்விக்கப்பட்டது