பக்கம்:தமிழக ஆட்சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

தமிழக ஆட்சி



குறிக்கப்பட்டுள்ளது. தேர்ப்பாகர் இருந்தனர். தேர் மொட்டு, தேர்வட்டை முதலிய தேரின் உறுப்புக்கள் கடை களில் விற்கப்பட்டன. தேர்ப்பாகர் தேர் ஊருநர் என்று பெயர் பெற்றனர். இவை அனேத்தையும் நோக்க, சங்க காலத்தில் திேர்கள் பயன்பட்டன. என்பது தெளிவாகத் தெரிகின்றது. பாரிவள்ளல் முல்லைக்குத் தேர் ஈந்தான் என்பதும் இங்கு நினைக்கத் தகும். ஆயின், தேர்ப்படை என்று ஒரு படை இருந்தமைக்குச் சான்றில்லை.”

யானைப் படை

சேரநாடு யானைகளுக்குப் பெயர் போனது. ஆய்வள்ளல் பரிசிலருக்கு யானைகளையே பரிசாகக் கொடுத்தான் என்று புறநானூறு புகல்கின்றது. அரசன் ஏறிச் சென்ற யான நெற்றிப்பட்டம் உடையது; வேறு பல ஆபரணங்களே உடையது தந்தத்தில் பூனே உடையது, யானைமீது அரசனது கொடி காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அரசன் யானைமீது சென்று பகைவர் கோட்டைக் கதவுகளை அதன் கொம்புகளால் குத்தச் செய்வான். யானைகள் தம் கொம்புகளால் குத்திக் கதவுகளே உடைத்தன. கணைய மரத்தை முறித்தன; போர்க் களத்தில் புகுந்து பகை வீரரைச் சிதறடித்தன: பகைவருடைய மதிலரண்களே அழித்தன. “சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி ஏறியிருந்த யானை எமனைப் போன்ற தோற்றமுடையது; கடலில் செல்லும் கப்பல் போலவும் விண்மீன்களுக்கு இடையே செல்லும் முழுமதி போலவும் காணப்பட்டது. அது

1. சிலம்பு, காதை 5, வரி 55, .’ 2. “தானே шrror குதிரை என்ற

நோஞர் உட்கும் மூவகை நிலையும்’ - என்பது தொல்காப்பியம்-புறத்திணை இயல், சூ.17 புறநானூறு, 326, 153, 97. புறநானூறு, 3, 6, 9, 13, 31.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/107&oldid=573625" இலிருந்து மீள்விக்கப்பட்டது