பக்கம்:தமிழக ஆட்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

தமிழக ஆட்சி



கிடாய்ப் போர் என்பவை போல யானைப் போரும் சங்க காலத்தில் நடைபெற்றது என்பது,

‘ குன்றேறி யானைப்போர் கண்டற்றால் ‘

என்ற குறளடிகளால் அறியலாம்.’

பல்லவர்களும் யானைப்படை வைத்திருந்தனர் என் பதைக் கூரம் பட்டயங்களும், காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்களும் உணர்த்துகின்றன. செள-ஜு-குவா என்ற சீன யாத்திரிகர் சோழ மண்டலக் கரையிலிருந்த போர் யானைகளைப்பற்றிப் .ே ப. சு மி ட த் து, ‘அரசாங்கத்திடம் அறுபதாயிரம் போர் யானைகள் இருக்கின்றன. அவற்றின் உயரம் ஏழு அல்லது எட்டு அடி இருக்கும். ஒவ்வொரு யானையின்மீதும் ஒர் அம்பாரி உண்டு. அதில் வீரர் பலர் இருந்துகொண்டு நீண்ட தொலைவு வரையிலும் அம்புகளை விடுவர் ; பகைவரை நெருங்கியவுடன் ஈட்டிகளை எறிவர். போரில் வெற்றி பெற்றால், யானைகளுக்குச் சிறப்புப் பெயர் இடப்படும்,’ என்று குறித்துள்ளார். ‘ஒரு யானை முப்பது வீரர்களைச் சுமந்து செல்கிறது. ஒரு போர் யானை ஏறத்தாழ 1500 மனிதர்களுக்குச் சமமென்று சொல்லாம். யானைகளின் தந்தங்களில் கூர்மையான போர்க் கருவிகள் கட்டப்படும். யானைகள் அவற்றைப் பகைவர்மீது பாய்ச்சிப் பகைவர் படைகளில் பெருங்குழப்பத்தை உண்டாக்கும்,’ என்று ஜார்டனஸ் என்ற அயல் நாட்டார் கூறியுள்ளார்.” தக்கோலப் போரில் இராசாதித்தியன் யானைமீது இருந்து போரிட்டான். முதலாம் இராசாதிராசன் கொப்பத்துப் போரில் யானைமீதிருந்து போர் புரிந்தான்.

திெகாரசிெ 3. 2. F. N. of S. I. P. 144 3. டிெ, பக். 206,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/109&oldid=573627" இலிருந்து மீள்விக்கப்பட்டது