104
தமிழக ஆட்சி
காலாட்படை
சங்ககாலப் போர்வீரர் மறவர் எனப்பட்டனர். மறம். வீரம். அவர்கள் வில், வேல், வாள் முதலிய போர்க்கருவி களைக் கொண்டு போரிட்டனர். ‘எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்’ என்ற புறப்பட்டு அடியால், வில்லும் அம்பும் இருந்தமை வெளியாகும். அவர்கள் பசுக்களைக் கவர்தல், அகழி தாண்டிக் கோட்டையைப் பிடித்தல், வெட்ட வெளியில் போரிடல் முதலிய பல திறப் போர்களில் வல்லு நராய் இருந்தனர். அவர் முன்படை வீரர், பின்படை வீரர், துணைப்படை வீரர் எனப்பல பெயர்களுடன் இருந்தனர்.
படைவீரர் தங்கள் அரசனிடம் மிக்க அன்பும் பக்தியும் கொண்டிருந்தனர்; அவனுக்காக உயிர் விடவும் துணிந்தனர். போரில் முன் வைத்த காஃப் பின் வைக்கலாகாது - போரில் புறங்காட்டலாகாது என்பது தமிழர் போர் அறம். மார்பில் காயம்பட்ட வீரனேயே அவன் மனைவி பாராட்டுவாள். குடும் பத்திலுள்ள ஆடவர் அனைவரும் போரில் இறந்தாலும் அக் குடும்பப் பெண்கள் மிக்க மகிழ்ச்சி அடைவர்; தம் ஆடவர் போர்த்திறனைப் பாராட்டிப் புகழ்வர். வீரமகளிர் போர்க் களம் சென்று இறந்த தம் கணவர் உடலைத் தழுவி உயிர் விடுவர். இவையெல்லாம் சங்ககாலச் செய்திகள்.
சங்ககால வீரர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் தொல்காப்பியம் -புறத்திணை இயல், புறநானூறு, பதிற்றுப் பத்து, சிலப்பதிகாரம் இவற்றில் பரக்கக் காணலாம்.
- - தமிழரசர் முக்கியமான எல்லைப்பகுதிகளில் கோட்டை களை அமைத்து, அங்கு நிலைப்படைகளை வைத்திருந்தனர், பேரரசர்க்கு அடங்கிய சிற்றரசர் தம் அளவுக்கு ஏற்றபடி படைகளை வைத்திருந்தனர்; உணவு, உடை, ஊதியம் இவற்றை வீரர்களுக்கு வழங்கினர்.