உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை

105



பிற்காலச் சோழர் காலத்தில் நாட்டுப்படை, கைக் கோளப் பெரும் படை, வேளைக்காரப்படை எனப் பலவாறு படைகளுக்குப் பெயர்கள் அமைந்திருந்தன. அரசாங்கப் படையில் பல பிரிவுகள் இருந்தன. பண்பட்ட வீரர் படையே கைக் கோளப் பெரும் படை’ எனப்பட்டது. முதலாம் இராசராசன் காலத்தில் படையில் 31 பிரிவுகள் இருந்தன.

வேளைக்காரப்படை என்பது, அரசனுக்கு ஆபத்து வரும் வேளையிலும், நாட்டுக்கு ஆபத்து வரும் வேளையிலும் தம் உயிரையும் மதியாமல் போர் புரியும் வீரர்களைக் கொண்டது. தேவைப்பட்ட போது வந்து உதவி புரியும் நிலைப்படை இது’ என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இன்னது செய்யத் தவறி ஞல் இன்னவாறு மடிவோம்’ என்று சபதம் செய்துகொண்ட வீரரே வேளைக்காரர் எனப்பட்டனர். இவருள் சிலர் ஊர்களைப் பாதுக்காத்தனர்; சிலர் திருச்சூல வேளைக்காரர்’ என்ற பெயரில் கோவில்களைக் கண்காணித்தனர். வேளைக்காரப் படையினர் பாண்டியனிடம் ஆபத்துதவிகள் என்று பெயர் பெற்றனர்.”

சோழர் காலத்தில் மளையாளப் படை, வடுகர் படை என்ப

னவும் இருந்தன. சாதாரண காலத்திலும் நாட்டைப் பாதுக்காக்க அமைந்த படையே காட்டுப்படை என்பது. ஐந் நூற்றுவர் என்றார் போன்ற வணிகர் சங்கங்கள் தங்கள் வாணிகத்தின் பொருட்டுப் படைகளே வைத்திருந்தன. வீரர் களுக்கு விடப்பட்ட நிலங்கள் அல்லது வருவாய் அமரம் எனப் பட்டது.” -

படைக்கருவிகள்

சங்க காலத்தில் வேல், வாள், வில் அம்பு முதலியன சிறந்த போர்க்கருவிகளாக இருந்தன. -

1 S. l. Ins. II, InsP. 9. 2. 391, 395 of 1917; 532, 433 of 1917.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/112&oldid=573630" இலிருந்து மீள்விக்கப்பட்டது