உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

தமிழக ஆட்சி



பெண்கள் முதலியோர் செல்வது வழக்கம். வீரர்களுக்கு உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்க ஆடல்-பாடல் மகளிரும் உடன் செல்வர்.”

போர் வகை

ஒரு நாட்டின்மேல் படையெடுக்க விரும்பும் அரசன் முதலில் தன் வீரரை ஏவிப் பகைவருடைய கால்நடைகளைக் கவர்வான். இது வெட்சித் திணை எனப்படும். இம் முயற்சியில் ஈடுபட்டவர் வெட்சி மலர்களைச் சூடுவர். இம்முயற்சியை எதிர்த்து நிற்பது கரந்தைத் திணை எனப்படும். அவர்கள் கரந்தை மலர்களைச் சூடிக் கொள்வர். பின்பு அந்நாட்டின் மீது படையெடுப்பு நடைபெறும். அது வஞ்சித் தினே எனப்படும், அப்படையெடுப்பை எதிர்த்து நிற்றல் காஞ்சித் திணை எனப்படும். கோட்டையை முற்றுகையிடல் உழிஞைத் திணை எனப்படும். கோட்டையுள் இருந்து எதிர்த்தல் கொச்சித் தின எனப்படும். கோட்டைக்கப்பால் வெட்ட வெளியில் நடைபெறும் கடும் போர் தும்பைத் தின எனப் படும். போரில் வெற்றி பெறுதல் வாகைத் திணை எனப்படும். ஒவ்வொரு தினைச் செயலிலும் ஈடுபட்ட வீ ர ர் க ள் அத்திணைக்குரிய மலர்கள் அணிந்து கொள்ளுதல் மரபு.

மேலே கூறப்பட்ட ஒவ்வொரு இணைப்போரும் பல படிகளேயுடையது. அப்படிகள் துறைகள் எனப்படும். இப் போர்க்கலை பற்றிய விளக்கம் தொல்காப்பியம்-புறத்திணே இயலில் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. இக்கலை வளர்ச்சி தொல்காப்பியர் காலத்தில் திடீரென ஏற்பட்டிருத்தல் இயலாது. தொல்காப்பியர்க்கு முன்னரே-பல நூற்றாண்டு களுக்கு முன்னரே வாழையடி வாழையாக வளர்ந்து வந்த போர்க்கலையின் விரிவே தொல்காப்பியத்தில் காணப்படு

கின்றது என்று கொள்ளுதலே அறிவுடைமையாகும்.

1. S. I. Polity, P. 268.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/115&oldid=573633" இலிருந்து மீள்விக்கப்பட்டது