பக்கம்:தமிழக ஆட்சி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை

109


அரசன் அல்லது அவன் நம்பிக்கைக்குரிய படைத் தலைவன் படைகளுக்குத் தலைமைத் தாங்கிப் போருக்குச் செல்லுதல் வழக்கம். கரிகாலன், சேரன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன் போன்றோர் தாமே படைகளுக்குத் தலைமை தாங்கினர். கங்கை கொண்ட சோழன் காலத்தில் இளவரசன் இராசாதிராசனே படைகளுக்குத் தலைமை தாங்கினன். - .

பாசறை நிகழ்ச்சிகள்

பாண்டியன் நெடுஞ்செழியனது பாசறை இரவு நிகழ்ச்சிகள் கீழ்வருமாறு குறிக்கப்பட்டுள்ளன. இவ் விவரங்களிலிருந்து பாசறை நிகழ்ச்சிகளை ஒருவாறு நாம் அறியலாம் :

பாண்டியன் தனக்கென்றமைந்த கூடாரத்தில் திரைச் சீலை தொங்கவிடப்பட்ட உள்ளறையில் உள்ள படுக்கையில் ஒரு கையை வைத்தும் மற்றாெரு கையை முடியுடன் சேர்த்தும் இருக்கிருன்; முதல் நாட்போரில் யானையை வேலால் எறிந்து இறந்த வீரரை நினைக்கிருன் , அம்பு தைத்த துன்பத்தால் செவி சாய்த்துப் புல் உண்ணுமல் நிற்கும் பரிகளை நினைக்கிருன்; ‘ இப்படை இவ்வளவு தளர்ச்சியுற்றிருப்பதால், இதனைக் கொண்டு நாம் நாளை வெற்றி காண்பது எங்ஙனம் ? எனத் தளர்ச்சி அடை கிருன். -

“ அவ்வமயம் அங்குக் காலத்தின் அளவை அளந்து சொல்லுவோர் மன்னனைப் பணிந்து வாழ்த்தி, நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்துணை எனக் கூறுகின்றனர். அப்பொழுது தூய வெள்ளையாடையை உடுத்த அழகிகள் விளக்கைக் கொளுத்துகின்றனர். -

  • பாசறையில் நான்கு தெருக்கள் கூடும் ஒவ்வொரு. சந்நிதியிலும் ஒரு யானை காவலாக நிறுத்தப்பட்டுள்ளது. அது கரும்யையும், நெற்கதிரோடு கலந்து கட்டிய இலே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/116&oldid=573634" இலிருந்து மீள்விக்கப்பட்டது