இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
110
தமிழக ஆட்சி
- ையும், அதிமதுரத் தழையையும் உண்ணவில்வே : அவற்றால் தனது நெற்றியைத் துடைக்கிறது : அவற்றைத் துதிக்கையில் ஏந்தித் துதிக்கையைத் தன் கொம்பின்மீது வைத்த வண்ணம் நிற்கின்றது. பாகன், ய ர ன ப் பேச்சுக்களைச் சொல்லிப் பிளவுபட்ட பரிக்கோலால் கல. வளத்தை உண்ணும்படிக் குத்துகிருன். இடுப்பில் வான் அணிந்த பெண் வேலையாட்கள் நெய் நிறைந்த திரிக் குழையில் நீண்ட திரியைக் கொண்டு செவ்வையாக அமைந்த விளக்குகளே ஏற்றுகின்றனர் ; விளக்குகள் அவியும் பொழுது தம் கையில் உள்ள பந்தத்தைக் கொண்டு அவற்றைக் கொளுத்துகின்றனர்.
- சட்டையும் தலைப்பாகையும் அணிந்த மெய்காப்பாளர் அரசனது இருப்பைச் சுற்றி வருகின்றனர். சட்டையிட்ட ஊமர் அரசன் பள்ளியறையைக் காவல் செய்கின்றனர். அரசனுே, மறுநாள் எவ்வாறு போர் செய்யலாம் என்பதைப் பற்றி எண்ணிய வண்ணம் துயில் கொள்ளாதிருக் .கின்றன். -
கோட்டையும் முற்றுகையும்
கோட்டைகள் தரையில் கட்டப்பட்டவை, தண்ணீரால் சூழப்பட்டவை. மலேமீது கட்டப்பட்டவை, காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை என்று நான்கு வகைப்படும். நாட்டின் எல்லைப்புறங்களில் அக்காலத்தில் காடுகள் இருந்தன. எல்லேப்புறக் கோட்டைகள் படைகள் தங்கி இருப்பதற்காகவே அமைக்கப்பட்டன. அவை படைப்பற்று எனப்பட்டன. இத்தகைய கோட்டைகளின் செலவுக் காகக் கோட்டைப்பணம் என்ற வரி வசூலிக்கப்பட்டது.”
1. டாக்டர் மா. இராசமாணிக்களுர், :த்துப்பாட்டுள் - காட்சிகள், பக். 47-48. -
’ s (பழநியப்பா பிரதர்ஸ், திருச்சிராப்பள்ளி) . 394 of 1921 . 3. Travancore Archeacological Series, W. P. 205.
2
.