உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

പഞl- 1 11

உள் நாட்டிலும் முக்கியமான பகுதிகளில் இத்தகைய கோட்டைகள் இருந்தன. சங்க காலத்தில் பறம்புமலை மூவேந்தரால் முற்றுகை இடப்பட்டது. சோழன் நலங் கிள்ளி.நெடுங்கிள்ளிகளின் போரில் ஆவூர்க்கோட்டையும், உறையூர்க் கோட்டையும் முற்றுகையிடப்பட்டன. இம் முற்றுகைத் தொடர்பான விவரங்களைப் புறநானூற்றில் «Gff"G5ðről)fTLD .

முற்றுகையிடுபவர் உழிஞையார் எனப்படுவர். முற்றுகை யிடப்படுபவர் நொச்சியார் எனப்படுவர். இவ்விருதிறத்தாரும் செய்த போர்வகைகள் தொல்காப்பியத்திலும், புறப்பொருள் வெண்பா மாலையிலும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.

விசயநகரம் ஏழு மதில்களைக் கொண்டிருந்தது. கோட்டைக்குள்ளிருந்தவர் வசதியாக இருக்கப் பழங் காலத் தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மூன்றாம் குலோத்துங்கன் மதுரைக் கோட்டையை அழித்தான், மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சாவூர்க் கோட்டையையும் உறையூர்க் கோட்டையையும் அழித்தான் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சங்க காலத்தில் கோட்டைக் கதவுகள் யானைகளால் தாக்கப்பட்டன-யானை கள் தங்கள் தந்தங்களால் தாக்கின என்ற செய்திகள் முன்னரே குறிக்கப்பட்டன அல்லவா ? -

கடற்படை

தமிழகம் பல நூற்றாண்டுகளாகக் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தது. எனவே, மூன்று தமிழரசர்களும் கடற்படையை வைத்திருந்தனர் என்பது பொருந்தும். கப்பல்களே வழிமறித் துக் கொள்ளையடித்து ஒரு தீவில் வாழ்ந்து வந்த கடம்பரை நெடுஞ்சேரலாதன் வென்றான்; அவ்வாறே செங்குட்டுவனும் வென்றான்; “கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்’ என்று பெயர் பெற்றான். இவ்விவரங்களைப் பதிற்றுப்பத்தில் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/118&oldid=573636" இலிருந்து மீள்விக்கப்பட்டது