112
தமிழக ஆட்சி
பல்லவர் காலத்தில் முதலாம் நரசிம்மவர்மன் மாமல்ல புரத்திலிருந்து கடற்படையை இலங்கைக்கு இரண்டு முறை அனுப்பினன். இராசசிம்மன் இலட்சத் தீவுகளை வென்முன். இச்செய்திகள் பல்லவர் கடற்படை வைத்திருந்தனர் என்ற உண்மையைத் தெரிவிக்கின்றன. பிற்காலச் சோழரிடம் பெரிய கடற்படை இருந்தது. அக்கடற்படையின் துணையால் முதலாம் இராசராசன் இலங்கையையும் முந்நீர்ப்பழந்தீவு பன்னிராயிரத்தையும் வென்றான்; கங்கைகொண்ட சோழன் மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள், நிகோபர்த் தீவுகள் முதலிய வற்றை வென்முன். - அரசர் வஞ்சினம்
போருக்குச் செல்லுமுன் அரசர் சிலர் சூள் உரைத்தல் வழக்கம். சேரன் செங்குட்டுவன் இமயமலை வரை படை “யெடுத்துக் செல்லும்போது குள் செய்தான் என்பதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். மதுரையை ஆண்ட பூதபாண்டியன், “என் மீது படையெடுத்து வந்த பகைவரை வெல்லேனுயின், என் மனைவியைவிட்டு யான் பிரிவேளுக; அறம் நிலை பெற்றுள்ள அவையில் (நீதி மன்றத்தில்,) அற மற்ற ஒருவனை வைத்து முறை கலங்கிக் கொடுங்கோல் செய்தேன் ஆகுக. மையல் என்னும் ஊர்க்குத் தலைவனகிய மாவன், எயில் என்னும் ஊருக்குத் தலைவனகிய ஆந்தை, அந்துவன் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் என்னும் என் நண்பரது மகிழ் நகையைத் தப்பியவன் ஆகுக: பல உயிர் களையும் பாதுகாக்கும் பாண்டிய அரச மரபிலிருந்து நீங்கிப் பகைவருடைய வன்புலங்களைக் காக்கும் காவலாளியாகப் பிறப்பேனுகுக,’ எனச் சூளுரைத்தான், !
1. S, I. I. II. P. 356. 2. E. I. 18 P. 152. 3. காதை 25, வரி 128-140, 4. புறநானூறு, செ. 71.