பக்கம்:தமிழக ஆட்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை

113



தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன், “இப்பகைவரை யான் வெல்லேனயின், என்

னைக் கொடுங்கோல் அரசன் என்று என் குடிகள் துாற்று

வாராக. மாங்குடி மருதன் போன்ற புலவர் பெருமக்கள் எனது நாட்டைப்பாடாது ஒழிவராக,’ என்று சூள் செய்தான். சோழன் கலங்கிள்ளி, இப்பகைவரை யான் வெல்லேனயின், எனது மாலை பொது மகளிர் மார்பில் துவள் வதாக,’’ என்று சூள் உரைத்தான்.” போர் நிகழ்ச்சிகள்

கரிகாலன் பகைவர் நாடுகளைக் கைப்பற்றினன். அவன் கைப்பற்றிய ஊர்களில் மதில்கள் அழிந்தன, கூகைகள் இருந்து குழறின என்று பட்டினப்பாலே கூறுகின்றது. படை யெடுக்கும் அரசனைச் சேர்ந்த வீரர் பகைவர் நாட்டு ஊர் களைக் கொளுத்துதல் வழக்கம்; கோட்டைகளே இடிப்பது வழக்கம்; இந்த அழிவுகளை எல்லாம் புறநானூற்றில் காண லாம். பிற்கால அழிவுகளைக் கலிங்கத்துப் பரணியில் விரிவாகக் கா. லாம். ‘நீ படையெடுத்தால் பகைவர் நாடு அழிவுறுமே” என்று புலவர்கள் வருந்திப் பாடிய பாடல்கள் பல. இத்தகைய பாடல்கள் கொற்ற வள்ளை என்று பெயர் பெறும். அரசனது தலைநகரில் கட்டடங்கள் இடிக்கப்படும்; அந்த நிலம் கழுதைகளால் உழப்படும்: கவடி விதைக்கப் படும். வென்ற அரசர் வெல்லப்பட்ட நாட்டுக் குளங்களில் தம் யானைகளே நீராட்டுவர்; வென்ற நாட்டில் தங்கள்

வெற்றித் தூண்களை நாட்டுவர், அல்லது தங்கள் இலச்சினே யைப் பொறிப்பர்: வென்ற அரசர் தோற்ற அரசர் குடியி

லிருந்து தம் காலுக்குரிய கழலைச் செய்து கொள்வர்.

1. புறம், செ. 72 2. புறம், செ. 73, 3. வரி 239-260

4. புறநானூறு, செ. 4, 7, 41, 98 8. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/120&oldid=573638" இலிருந்து மீள்விக்கப்பட்டது