பக்கம்:தமிழக ஆட்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை

117


.

பாடு இந்து வீரர்களுக்கு அமையவேண்டும் என்பதற்காகவே இருஷ்ணதேவராயர் முஸ்லிம் வீரர்களைக்கொண்ட படை ஒன்றை அமைத்தார். அப்படை தொடர்ந்து இருந்து வந்தது.’

அயல் நாட்டுத் தொடர்பு

ஒவ்வொரு நாட்டிலும் எல்லாப் பொருள்களும் கிடைப் பதில்லை. எல்லா நாடுகளிலும் எல்லாக் கைத்தொழில்களும் நடைபெறுதலும் இல்லை. ஆதலால் ஒருநாடு பிறநாடுகளோடு நட்புக்கொண்டு தனக்கு வேண்டிய பொருள்களைப் பெறுவதே இயல்பு: அந்நாடுகளில் இல்லாத-தன்னிடத்தில் மட்டும் உள்ள-பொருள்களே அங்கு அனுப்புவதும் இயல்பு. இந்த முறையில்தான் உள் நாட்டு வாணிகமும் வெளிநாட்டு வாணி கமும் தோன்றின. ஏறக்குறைய ஐயாயிரம் ஆருயிரம் ஆண்டு களாகத் தமிழ்நாடு அயல் நாடுகளுடன் வாணிகத் த்ொடர் பைக் கொண்டிருந்தது. வாணிகத் தொடர்பால் நாகரிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் உண்டாதல் இயற்கை.

தமிழகம் கிழக்கில் உள்ள சீனம், மலேயா, ஜாவா முதலிய நாடுகளுடனும், மேற்கில் ரோம், கிரீஸ், எகிப்து, சிறிய ஆசியா, அரேபியா, பாரசீகம் முதலிய நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. ஹீப்ரு மொழி நூல் களில் சொல்லப்பட்ட"துகி’ என்பதும், தமிழ்த்தோகை’ என் பதும் சாலமன் (கி. மு. 1000) கப்பல்களிற் தமிழகத்துப் பொருள்கள் சென்றன என்பதும், கி. மு. 3000க்குக் குறை யாத காலத்தில் தேக்க மரத் துண்டங்கள் அரேபிய நாட்டிற் குத் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன என்பதும் தமிழகத் துக் கடல்வாணிகப் பழைமையை உணர்த்தும் சான்று களாகும். அண்மையில்உள்ள இலங்கைத் தீவுடன் அரசியல்,

1. S. I. polity, pp. 292-293. .

2. Caldwell, comp. gr., p. 88; Regozin, Vedic India,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/124&oldid=573642" இலிருந்து மீள்விக்கப்பட்டது