பக்கம்:தமிழக ஆட்சி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை

119



“நீதி நூல்களும் ஒற்றரும் அரசனுக்கு இரண்டு கண்கள். அரசனுடைய கண் செல்லாத இடங்களிலெல்லாம் நிகழும் நிகழ்ச்சிகளே ஒற்றர் அறிந்துவந்து கூறுவதால், அவர்கள் “கண்” எனப்பட்டனர். இந்த ஒற்றருட் சிலர் அரண்மனையில் இருப்பார்: சிலர் வெளி நாடுகளில் இருப்பர்; அரசனுக்கும், நாட்டுக்கும் வர இருக்கும் நீங்கினே உளவறிந்து உரிய காலத் தில் தெரிவிப்பர். இவர்கள் ஒற்றர் என்பதை பிறர் அறியா வண்ணம் நடந்து கொள்வர்; பிறர் ஐயங்கொண்டு விசா ரிக்கும் பொழுது உண்மையைக் கூருது. ஐயத்தைப் போக்கி அகல நடிப்பார்: முற்றத் துறந்த முனிவர் வேடத்திலும் சென்று புகுகற்கசிய இடங்களில் புகுந்து ஆராய்வர். அரசன் ஒர் ஒற்றன் சொல்லியவற்றை வேறு ஒற்றன் கூற்றைக் கொண்டு ஆராய்ந்து உண்மை அறிவான். ஒன்றை ஆராயும் பொழுது ஒற்றர் பலர் வேலை செய்வார். ஆயின், அவர்கள் ஒருவரை ஒருவர் அறியார். ஒற்றுத் தொழிலில் சிறந்த வலுக்கு அரசன் பிறருக்கு தெரியாமல் சிறப்புச் செய்ய வேண்டும்.

“தமது வடநாட்டு யாத்திரையை வடநாட்டு மன்னர் அறியும்படி ஒல் போக்குங்கள்,’ என்று சேரன் செங்குட் டுவன் கூறியபொழுது, அழும்பில் வேள் என்பவன். செங்குட் டுவண் நோக்கி, நமது வஞ்சி மாநகரில் பலநாட்டு ஒற்றர்கள் இருக்கின்றனர். நம் பகை அரசர் ஒற்றர்களும் இருக்கின் றனர். ஆதலால் நமது மாநகரத்தில் பறை அறைதல் போதும். இச்செய்தி ஒற்றர் வாயிலாக அந்தந்த அரசர்க்குத் தெரிந்துவிடும்,’ என்று கூறிஞன். இத்தகைய ஒற்றர் சங்ககாலம் முதல் இன்றுவரை இருந்து வருகின்றனர்.

தூதுவர்

ஒற்றரைப் போலவே அரசர்க்கு இன்றியமையாத உதவி யாளர் தூதுவர் எனப்பட்டனர். தாதுவரைப் பு 藏

1. குறள், அதிகாரம் 39. 2. சிலம்பு. காதை 25, வரி 173-1 ン .... ×

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/126&oldid=573644" இலிருந்து மீள்விக்கப்பட்டது