பக்கம்:தமிழக ஆட்சி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

தமிழக ஆட்சி



முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் என்ற சோழ மன்னர்கள் சீனத் துக்குத் தூதுக்குழுவினரை அனுப்பினர். முதற் குலோத்துங் கல்ை அனுப்பப்பட்ட தூதுக் குழுவில் 72 பேர் இருந்தனர். அவர்கள் யானைத் தந்தம், மணப் பொருள்கள் முதலிய வற்றை எடுத்துச் சென்றனர். சீனப் பேரரசன் பதிலுக்குப் பல பொருள்களை வழங்கிச் சிறப்பித்தான்.”

கி. பி. 1280-இல் குலசேகரப் பாண்டியன் ஜமாலுத்தீன் என்ற துதுவனைச் சீனத்துக்கு அனுப்பின்ை; தன் பகைவரை வெல்லத் தனக்கு உதவி புரியும்படி வேண்டினன். சீனப் பேரரசன் அத்துதுவனை வரவேற்றான் : அவனுடன் தன் தூதுவனையும் பாண்டிய நாட்டிற்கு அனுப்பின்ை. அச் சீனத் துரதன் சிறிது காலம் பாண்டிய நாட்டில் தங்கி யிருந்து, 1282-இல் சீனத்துக்குத் திரும்பினன். பாண்டியன் விலையுயர்ந்த முத்துக்களையும் நகைகளையும் மெல்லிய பட்டாடைகளையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் (ஆண்டு. தோறும்) தன் தூதர் வாயிலாகச் சீனத்துக்கு அனுப்பின்ை. 1285-இல் சீனத்திலிருந்து தென் இந்தியா நாடுகளுக்குத் துரதர் வந்தனர். இது முதல் ஆண்டுதோறும் இருநாடு’ களிலிருந்தும் தூதர்கள் வருவதும் போவதுமாக இருந் தனர்.”

இவ்வாறு தமிழரசர்கள் சீனத்தோடு உறவு கொண்டாற் போலவே மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள் இவற்றை ஆண்ட அரசர்களோடும் நல்லுறவு கொண்டு இருந்தனர். கி. பி. 1006-இல் அந்நாட்டு அரசனது வேண்டுகோளால் முதல் இராசராசன் நாகப்பட்டினத்தில் புத்தர் கோவில்

ГТ. К. А. N. 2таяя, батра. Гря. 256-7.

2. W. R. R. தீட்சிதர், தென்னிந்தியாவும் சீனமும்,

பக், 16-18.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/129&oldid=573647" இலிருந்து மீள்விக்கப்பட்டது