பக்கம்:தமிழக ஆட்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தமிழக ஆட்சி



எனவே, கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் தமிழரசுகள் நிலைபெற்றிருந்த உண்மை இவற்றைக்கொண்டு நன்கறியலாம். கி. பி. முதல் இரண்டு நூற்றண்டுகளில் பிளேகி, தாலமி, பெரிப்ளுஸ் என்னும் நூலின் ஆசிரியர் என்ற மேலைநாட்டு யாத்திரிகர் தாம் நேரிற் கண்ட தமிழகத்துக் கடல் வாணிகத்தைப் பற்றி எழுதியுள்ளனர்; தமிழரசைப் பற்றித் தாம் கேட்டவற்றையும் குறித்துள்ளனர். கி. பி. 7-ஆம் நூற்றண்டில் தமிழ் நாட்டை நேரிற் பார்த்த யுவான்சுவாங்கு போன்ற சீன யாத்திரிகர் தமிழகத்தைப் பற்றிப் பல விவரங்களே எழுதியுள்ளனர்.

பிற்காலச் சோழர் காலத்தில் தமிழகத்தைப் பார்வையிட்ட மார்கோ போலோ என்ற மேனாட்டு யாத்திரிகரும், சீன அரசியல் தூதர்களும் எழுதிவைத்துள்ள குறிப்புக்கள் பலவாகும். இக்குறிப்புக்களுள் பல, தமிழ் நூல்களில் இல்லாதவையாகும். விசயநகர ஆட்சிக் காலத்தில் விசயநகரத்துக்கு வந்து தங்கியிருந்த அப்துர் ரசாக் முதலிய அயல்நாட்டுத் தூதரும் அறிஞரும் எழுதி வைத்த குறிப்புகள் பலவாகும். இவ்வாறே மதுரையை ஆண்ட நாயக்க மன்னர் காலத்தில் வாழ்ந்த பாதிரிமார்கள் அந்த அரசர்களைப் பற்றியும் நாட்டு நிகழ்ச்சிகளேப் பற்றியும் எழுதியுள்ள செய்திகள் பல. இவையாவும் தமிழக ஆட்சி பற்றிய பல விவரங்களே அறிய உதவுகின்றன.

(4) கல்வெட்டுக்கள்

தமிழக ஆட்சியற்றிய செய்திகளை அறியச் சங்க காவக் கல்வெட்டுக்கள் இல்லை. பல்லவர்காலக் கல்வெட்டுக்களும் செப்புப் பட்டயங்களும் கிடைத்துள்ளன. சோழர் காலத்தில் கல்வெட்டுக்களின் பெருக்கம் மிகுதியாகும். அன்பில் பட்டயம் போன்ற பட்டயங்களும் சில கிடைத் துள்ளன. அவற்றுள் பல்லவராயன் பேட்டை சாஸனம் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறே சோழர்கால ஊராட்சி பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/13&oldid=504891" இலிருந்து மீள்விக்கப்பட்டது