பக்கம்:தமிழக ஆட்சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

தமிழக ஆட்சி



மாகாணப் பிரிவுகள் : சங்க காலத்தில்

ஒரு நாட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு அதிகாரியை நியமித்து ஆளச் செய்வது ஆட்சியில் நல்ல பயனே உண்டாக்கும் என்பது இன்றளவும் இருந்துவரும் நல்ல கொள்கையாகும். நம் முன்னேர் இதனை நடைமுறையில் செய்து காட்டினர். முத்துார்க் கூற்றம், மிழலைக் கூற்றம் என்ற நாட்டுப் பிரிவுகளே நோக்க, சோழ பாண்டிய நாடுகள் பல கூற்றங்களாகச் சங்க காலத்தில் பிரிக்கப்பட்டிருந்தன என்று நினைத்தல் பொருத்தமாகும். தொண்டை நாட்டில் இருபத்து நான்கு பிரிவுகள் இருந்தன என்பது திட்டமாகத் தெரிகிறது. ஒவ்வொரு பிரிவும்

கோட்டம் எனப்பட்டது.

அக்கோட்டங்களாவன : (i) புழல் கோட்டம் (13) பல்குன்றக் கோட்டம் (2) ஈக்காட்டுக் கோட்டம் (14) இளங்காட்டுக் கோட்டம் (3) மணவிற் கோட்டம் (15) காலியூர்க் கோட்டம் (4) செங்காட்டுக் கோட்டம் (16) செங்கரைக் கோட்டம் (5) பையூர்க் கோட்டம் (17) படுவூர்க் கோட்டம் (6) எயில் கோட்டம் (18) கடிகூர்க் கோட்டம் (7) தாமல் கோட்டம் (19) செந்திருக்கைக் கோட்டம் (8) ஊற்றுக்காட்டுக் (20) குன்றவட்டான

கோட்டம் கோட்டம்

(9) களத்தூர்க் கோட்டம் (21) வேங்கடக்கோட்டம் (10) செம்பூர்க் கோட்டம் (22) வேலூர்க் கோட்டம் (11) ஆம்பூர்க் கோட்டம் (23) சேத்துார்க் கோட்டம் (12) வெண்குன்றக் கோட்டம் (24) புலியூர்க் கோட்டம்

1. R. கோபாலன், காஞ்சிப் பல்லவர், பக். 147.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/131&oldid=573649" இலிருந்து மீள்விக்கப்பட்டது