பக்கம்:தமிழக ஆட்சி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டல ஆட்சி

125


.

இவை பல்லவர் காலத்தில் இருந்தமைக்குரிய சான்றுகள் கிடைக்கின்றன. ஆயின், இவை பல்லவரால் உண்டாக்கப் பட்டன என்பதற்குச் சான்று இல்லை. பல்லவர் காலத்தில் ‘விஷயம்’, “இராட்டிரம் என்று நாட்டின் உட்பிரிவுகள் பெயர் பெற்றனவே தவிரக் கோட்டம்’ என்ற தனித் தமிழ்ப் பெயர் பெறவில்லை. மேலும், பல்லவர் பாலி மொழியிலும் வடமொழியிலும் பட்டயங்களே வெளியிட்ட அயல் அரச ராவர். எனவே, இப்பெயர்கள் சங்க காலத்தன எனக் கொள்ளுவதே ஏற்புடையதாகும்.

சங்க காலத்தில் சோழ நாட்டில் பன்றி நாடு என்ற உட்பிரிவு இருந்தது. தொண்டை நாடு-அருவா நாடு, அருவா வடதலை நாடு என்று இரண்டு பிரிவுகளைப் பெற் றிருந்தது. சேர நாடு-கற்கா நாடு, வேள் நாடு, குட்ட நாடு, குடநாடு, பூழி நாடு எனப் பல நாடுகளைப் பெற் றிருந்தது. இவற்றை நோக்க, இவற்றுள் ஒவ்வொரு நாடும் ஒரு காலத்தில் தனித்தனி ஆட்சி பெற்ற நாடாக இருந்திருத்தல் வேண்டும்-பின்பு முறையே, பன்றி நாடு சோழர் ஆட்சியிலும், அருவா நாடும், அருவா வடதலையும் தொண்டைமான்கள் ஆட்சியிலும், கற்கா நாடு முதலியன சேரர் ஆட்சியிலும் சேர்ந்திருத்தல் வேண்டும் என்று: கருதுதல் பொருத்தமாகும்.”

இடைக்காலத்தில்

பிற்காலச் சோழர் காலத்தில் சோழப் பெருநாடு: என்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. அவை அரசன்து விருதுப் பெயரைத் தாங்கி நின்றன. (1): தொண்டை நாடு சயங்கொண்ட சோழமண்டலம் எனவும், (2) பாண்டிய நாடு இராசராசப் பாண்டி மண்டலம் என வும், (3) சேர நாடு மலை மண்டலம் எனவும், (4) சோழநாடு.

1. S. I. Polity, pp. 302-303

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/132&oldid=573650" இலிருந்து மீள்விக்கப்பட்டது