உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

தமிழக ஆட்சி



சோழ மண்டலம் எனவும், (5) கங்காடு முடிகொண்ட சோழ மண்டலம் எனவும், (6) நுழம்பபாடி நிகரிலி சோழ மண்டலம் எனவும், (7) கொங்கு நாடு அதிராசராச மண்டலம் எனவும், (8) வேங்கி நாடு வேங்கி மண்டலம் எனவும், (9) ஈழநாடு மும் முடிச் சோழ மண்டலம் எனவும் வழங்கப்பட்டன.”

ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. சோழமண்டலம் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வளநாடும் இரண்டு ஆறு களுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியாகும், வளநாட்டின் பெயர்கள் ஆளும் அரசன் பெயர்களைக் கீழ் வருமாறு தாங்கி

நின்றன:

அருமொழி தேவ வளநாடு, சத்திய சிகாமணி வளநாடு, கேரளாந்தக வளநாடு (தென்கரை கேரளாந்தக வளநாடு), இராசேந்திரசிம்ம வளநாடு (வடகரை இராசேந்திர சிம்ம வளநாடு, இராசாஸ்ரய வளநாடு, நித்த விநோத வளநாடு, உய்யக் கொண்டான் வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு ..(தென்கரை நாடு), வடகரை இராசராச வளநாடு.”

இங்குக் குறிக்கப் பெற்றுள்ள வளநாடுகளின் பெயர்கள் முதல் இராசராச சோழனுடைய இயற்பெயரும் பட்டப் பெயர்களுமேயாகும். முதற் குலோத்துங்க சோழன் இப் பெயர்களை நீக்கித் தன் பெயர்களை இட்டான். சான்றாக, சத்திரிய சிகாமணி வளநாடு என்பது குலோத்துங்க சோழ வளநாடு என்று பெயரிடப்பட்டது. இராசேந்திர சிங்க வளநாடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது; அவற்றுள் மேற்கிலுள்ள பகுதி உலகுய்ய வந்த சோழவள நாடு எனவும், கிழக்கிலுள்ள பகுதி விருதராச பயங்கர வளநாடு எனவும்

— 1. S. I. I. II. Int. pp, 21—29

2. S. I. I. II. 4 3. S. I. I. II. Int pp. 21-27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/133&oldid=573651" இலிருந்து மீள்விக்கப்பட்டது