128
தமிழக ஆட்சி
பல்லவர் ஆட்சி கிருஷ்ணையாறு முதல் காவிரியாறுவரை பரவியிருந்தது. அந்நாடு விஷயங்கள், இராஷ்டிரங்கள் என்ற பிரிவுகளைப் பெற்றிருந்தது. இராஷ்டிரம் என்பது மண்டலம் என்ற பிரிவுக்கு இணையாகும். இவற்றுள் ‘இராஷ்டிரம்’ என்பது இராஷ்டிரபதி என்பவன் ஆட்சி யிலும், விஷயம், என்பது விஷபயதி’ என்பவன் ஆட்சி யிலும் இருந்தன. தொண்டை நாடு துண்ட ராஷ்டிரம்” எனப்பட்டது. பல்லவ நாட்டிலும் சிற்றரசர் சிலர் இருந்து வந்தனர். ‘பல்லவர்க்குத் திறைகொடா மன்னவர் ’’’ என்று சுந்தரர் தேவாரம் கூறுகிறது.
பிற்காலச் சோழர் காலத்தில் மேலே கூறப்பெற்ற மண் டலங்களை அரச மரபினர் அரசப் பிரதிநிதிகளாக இருந்து ஆண்டுவந்தனர். சோழப் பேரரசர் தாம் வென்ற நாடுகளுக் குரிய அரசர்களேயே தமக்கு அடங்கி அந்நாடுகளே ஆளும்படி விட்டனர்; அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபொழுது, அவர் களே நீக்கித் தம் மைந்தரை அல்லது நம்பிக்கைக்கு ரிெயவரை மண்டலத் தலைவராக்கினர். இம்மண்டலங்களில் வேறு பல சிற்றரசர்கள் சிறிய நிலப்பகுதிகளை ஆண்டுவந்தனர். தெலுங்கச் சோழர், பொத்தப்பிச் சோழர், சம்புவராயர், வாணுதிராயர், யாதவராயர், அதிகமான்கள், காடவராயர், பல்லவராயர், மழவராயர் எனப்பல சிற்றரசர்கள் சோழப். பெருநாட்டில் இருந்து வந்தனர்.
மண்டலத் தலைவன் மண்டல ஆட்சியைக் கவனித்து வந்: தான். அவனுக்குக் கீழ்ப் பலதிறப்பட்ட அதிகாரிகள் இருந்து வந்தனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனிப்படை இருந்தது. அவர்கள் ஆட்சியில் பெரும்பாலும் நடு ஆட்சி தலையிடுவதில்லை. பேரரசன் கீழ்வரும் உரிமைகளே உடையவன்.
1. R. Gopalan, Pallavas of Kanchi, p. 148 2. S. I. polity, p.313 3. Brunnræll பதிப்பு, பக், 110, செ. 4.