பக்கம்:தமிழக ஆட்சி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டல ஆட்சி

129



‘படையுங் கொடியுங் குடையும் முரசும் கடைகவில் புரவியுங் களிறுந் தேருங் தாரும் முடியும் நேர்வன பிறவுக் தெரிவுகொன் செங்கோல் அரசர்க்குரிய” என்பது தொல்காப்பியம். சிற்றரசர் சிலவற்றிற்கு உரியவர்.

“வில்லும் வேலும் கழலும் கண்ணியும்

தாரும் ஆரமும் தேரும் மாவும் . மன்பெறு மரபின் ஏஞேர்க்குரிய'.

என்பது தொல்காப்பியம். சிற்றரசர் இவற்றேடு படையும் வைத்திருந்தனர்.

விசய நகர வேந்தர் காலத்தில் அவர் ஆண்ட பெருநாடு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவும் ஒரு தலைவன் ஆட்சியில் விடப்பட்டது. அவன் நாயக்கன் எனப்பட்டான். அவன் பேரரசனுக்கு ஆண்டுதோறும் தனது வருமானத்தில் பாதியைக் கொடுத்து வந்தான்: போர்க்காலங் களில் படை உதவி செய்து வந்தான். அவன் தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து வந்தான் குடி மக்களுக்குத் தன் ஆட்சியில் ஏற்பட்ட நஷ்டங் களை ஈடுபடுத்தி வந்தான்; ஆண்டுப் பிறப்பன்று பேரரச னுக்குக் காணிக்கை செலுத்தி வந்தான்.”

பேரரசன் சிற்றரசர் பெண்களை மணந்து கொள்ளுதல் வழக்கம். முதல் இராசராசன் மனைவியருள் - வானவன் மாதேவி என்பவள் சேரன் மகள்: மீனவன் மாதேவியார் என்பவள் பாண்டியன் மகள்; இலாட மாதேவியார் என் பவள் இலாடராயர் என்ற சிற்றரசன் மகள்.

1. மரபியல், சூத்திரம் 72. 2. டிெ சூத்திரம் 84. 3. Sewell, A Forgotten Empire, pp. 281, 9 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/136&oldid=573654" இலிருந்து மீள்விக்கப்பட்டது