130
தமிழக ஆட்சி
மதுரையை ஆண்ட நாயக்கர் காலத்தில், அவர்தம் பெரு நாட்டில் பல பாளையபட்டுகள் உண்டாயின. பாளையக் காரர் மேலே கூறப்பெற்ற நாயக்கர்களைப் போலவே நாயக்கர் ஆட்சிக்கு அடங்கி ஆண்டு வந்தனர்.
நடு அரசின் அதிகாரம்
ஒவ்வொரு மாகாணத் தலைவனது ஆட்சியையும் நடு அரசாங்கம் கவனித்து வந்தது; தலையிடவேண்டும் தேவை உண்டான பொழுதுமட்டுமே தலையிட்டது. விசய நகரப் பேரரசுக்கு மதுரை நாயக்கர் ஆட்சி உட்பட்டது. இத்தகைய அரசுகள் நெறி தவறும் பொழுது, விசய நகரப் பேரரசர்கள் சிற்றரசர் நாடுகளுக்கு ஆணையாளரை நியமித் தனர். அவ்வாணையாளர் பெரும்பாலும் படைத் தலைவ ராகவே இருந்தனர். அவர்களுக்கு அடங்கியே மதுரை நாயக்கர் முதலிய அரசர்கள் ஆண்டு வந்தனர்.
தன்னைப் பேரரசன் என்று ஏற்றுக்கொள்ளாமல் கப்பங் கட்டத் தவறிய சிற்றரசரைப் படை வன்மையால் பேரரசன் ஒடுக்குவதும் உண்டு. முதற்குலோத்துங்கனது கலிங்கத்துப் படையெடுப்பு இதற்குச் சிறந்த சான்றாகும். பேரரசன் அரசி யல் அறிவிலும் போர்த்திறத்திலும் சிறந்துள்ள வரையிற்றான் சிற்றரசரும் மாகாண ஆட்சியாளரும் பேரரசுக்கு அடங்கியும் துணை செய்தும் வாழ்வர்: பேரரசன் திறமையற்றவனயின், சிற்றரசரும் மாகாண ஆட்சியாளரும் உள்நாட்டுக் குழப் பத்தை உண்டாக்கித் தம் ஆட்சி உரிமையை நிலைநாட்டிக் கொள்வர். மெளரியப் பேரரசு முதலிய வல்லரசுகள் தேய்ந்து மறைந்தமைக்குரிய சிறந்த காரணம் இதுவேயாகும்.
1. Mahalingam, Administration and Social Life under
Vijayanagr, pp. 203 - 4.