9. உள் ஆட்சி
“உள் ஆட்சி’ என்பது நாடு ஆட்சி என்றும் ஊர்ஆட்சி” என்றும் இருவகைப்படும். பல ஊர்கள் அடங்கியது ஒரு நாடு.
சங்ககால மன்றங்கள்
ஊரார் பொதுவாகச் சந்திக்கும் இடம் ஊர் மன்றம் எனப்பட்டது. அதுவே விழாக்களும் வேடிக்கைகளும் நடை பெறும் பொது இடம்; ஊர்த் தெய்வங்களுக்கு உயிர்களைப் பலியிட்டு வழிபாடு நடைபெறும் இடம். இங்ஙனம் ஊரார்க்கு உயிர்நாடியாக இருந்த மன்றம் பகை அரசரால் கைப்பற்றப்பட்டு கழுதைகள் பூட்டப்பெற்ற ஏர்கொண்டு உழப்படுமாயின், அச்சிற்றுார் பகைவர் கைப்பட்டது என்பது பொருளாகும்.”
கிள்ளிவளவன் தன் பகைவனை மலையமான் பெற்ற ஆண்மக்கள் இருவரை (சிறுபிள்ளைகளை) மன்றில் நிறுத்தி யானையைக் கொண்டு கொல்ல நினைத்தான். மன்றில் பலர் காணத் தண்டனைகளும் நிகழ்த்தப் பெற்றன என்பது இதனல் தெரிகிறது அன்றோ? கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த காரணத்தால் உறையூர் மன்றம் வறிதே கிடந்தது என்று பொத்தியார் என்ற புலவர் வருந்தினர். அரசர்கள் புலவர் களோடு பொழுது போக்கவும் ஆட்சிச் செய்திகளே கவனிக்
1. புறம், 276,
2. டிெ 46 3. ைெடி 220.