உள் ஆட்சி
133
ஊரில் வளர்ந்திருந்த பெரிய ஆலமர நிழலில் ஊராட்சி - மன்றங்கள் நடைபெற்றன. அத்தகைய இடம் அம்பலம், மன்றம், பொதியில் எனப் பெயர் பெற்றது.
இடைக்காலத்தில்
இத்தகைய அவைகள் பல்லவர் காலத்திலும் இருந்தன.” சோழர் காலத்தில் இவைபற்றிய விவரங்கள் மிகுதியாகத் தெரிகின்றன. பிராமணரை மிகுதியாகக் கொண்ட ஊராட்சி மன்றங்கள் சபைகள் எனப்பட்டன. மற்றவரை மிகுதியாகக் கொண்ட ஊர்களில் இருந்த மன்றங்கள் ஊர் என்றே அழைக்கப்பட்டன. பல ஊர்களைக் கொண்ட ஒரு நாட்டு ஆட்சி மன்றம் நாடு எனப்பட்டது. இவையல்லாமல் நகரம், வளஞ்சியர், மணிக்கிராமம், மூலப்படையார் எனச் சில அவை கள் இருந்தன; இவற்றுள் நகரம் என்பது வணிகர் அவை, அடுத்த இரண்டும் வணிகப் பொருளாதாரக் கழகங்கள் என்று சொல்லலாம். நான்காவது கோவிலாட்சித் தொடர் பான அவை என்னலாம். இவை நான்கும் ஊராட்சி மன்றத்துக்கு அடங்கித் தனித்தனித் துறையில் பணியாற்றி வந்த கழகங்கள் என்னலாம். ஊர்த் தலைவன் ஊராட்சி மன்றத்திற்கும் அரசாங்கத்துக்கும் இணைப்பை உண்டாக்கும் நிலையில் இருந்தான். அரசன் பிறப்பித்த ஆணைகள் அவனிடமே வந்தன. ஊரார் அவனை மிக்க மரியாதையுடன் நடத்தி வந்தனர். சில சமயங்களில் அரசன் ஆணைகள் ஊரவையார்க்கே வந்தன. சில ஊர்களில் அரசாங்க அலுவலன் ஊர்த் தலைவனுக்குப் பதிலாகப் பணி யாற்றின்ை. . . . . .
1, 288 & 302 of 1902, 157& 161 of 1621, s. 1. I. III. 5 etc., . - - 2. S. I. Polity. pp: 335–6.