உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

தமிழக ஆட்சி



ஊர்-சபைகளின் கடமைகள்

நிலங்களுக்கு வரி விதித்தல், தொழில் வரி விதித்தல், வரிகளை வசூலித்தல், அவற்றில் ஒரு பகுதியை அரசாங்கத் திடம் சேர்த்தல், மறுபகுதியை ஊர் நலத்திற்குப் பயன் படுத்தல், குறிப்பிட்ட கால அளவுக்குள் வரி செலுத்தாதவர் நிலங்களைப் பறிமுதல் செய்து விற்றுப் பணத்தை அரசாங்கத் திடம் சேர்த்தல், தோட்டம்-ஏரி-வாய்க்கால் முதலிய வற்றைக் கண்காணித்தல், ஊர்க் கோவில் ஆட்சியை மேற். பார்த்தல், வழக்குகளை விசாரித்து நீதி வழங்குதல், ஊரார் நன்மை தீமைகளைக் கவனித்தல் முதலியன அவையினர் கடமையாகும். இவை ஊர், சபை என்னும் அமைப்புக் களுக்கும் பொதுவானவை.

உறுப்பினர் தேர்தல்

ஓர் ஊர் பல குடும்புகளாகப் (wards) பிரிக்கப்படும். ஒவ்வொரு குடும்பு மக்களும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பர்.

அங்ஙனம் தேர்ந்தெடுக்கப்படுபவர் கால்வேலி நிலமும் சொந்த மனையில் கட்டப் பெற்ற வீடும் பெற்றிருத்தல் வேண்டும்; பல சாத்திர நூல்களைக் கற்றுப் பிறருக்கு. உணர்த்த வல்லராய் இருத்தல் வேண்டும்; முப்பத் தைந்துக்கு மேற்பட்டு எழுபத்தைந்து வயதுக்கு உட்

பட்டவராய் இருத்தல் வேண்டும்; ந ல் வ | யி ல் சம்பாதித்த பொருளும் தூய வாழ்க்கையும் பெற்றிருத்தல்

வேண்டும்; மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டு எந்தச் செயற். குழுவிலும் உறுப்பினராய் இருத்தல் ஆகாது.

அவையில் உறுப்பினராயிருந்து கணக்குக் காட்டாத வரும், ஐவகைப் பெருந்தீமைகள் செய்தவரும், ஊர்க் குற்றம் பதிவுப் புத்தகத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டவரும், கள்ளக்கையெழுத்து இட்டவரும், பிறர் பொருளைக் கவர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/141&oldid=573659" இலிருந்து மீள்விக்கப்பட்டது