பக்கம்:தமிழக ஆட்சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் ஆட்சி

135



வரும், குற்றங் காரணமாகக் கழுதை மீது ஏற்றப் பெற்ற வரும், கையூட்டு வாங்கினவரும் கிராமத் துரோகி” என்று கருதப்பட்டவரும் உறுப்பினராதற்குத் தகுதியற்றவர்.

தேர்தல் நடைபெறும் நாளில் அரசாங்க உயர் அலுவலர் ஒருவர், சபை கூடுவதற்கான இடத்தில் ஊரார் அனைவரை யும் கூட்டுவர். கூட்டத்தின் நடுவில் ஒரு குடம் வைக்கப் படும். அங்குள்ள நம்பிமாருள் (அர்ச்சகருள்) வயது முதிர்ந்த ஒருவர், அந்தக் குடத்துள் ஒன்றும் இல்லை என்பதை ஊரார்க்குக் காட்டிக் கீழே வைப்பார். பின்பு ஒரு குடும்பினர் தம் குடும்புக்கு ஏற்ற ஒருவர் பெயரைத் தனித்தனி ஒலையில் எழுதுவர். அவ்வோலைகளை சேர்த்து, அக்குடும்பின் பெயர் எழுதிய வாயோலையால் மூடப்பட்டுக் கட்டப்படும். அக் கட்டுக் குடத்துள் வைக்கப்படும்; இங்ஙனமே பிற குடும் பினரும் ஒலை இடுவர். பின்பு அம்முதியவர் சிறுவன் ஒருவனை அழைத்துக் குடத்திலிருந்து ஒர் ஒலைக்கட்டை எடுப்பிப்பார்: அதனை அவிழ்த்து வேருேரு குடத்திலிட்டுக் குலுக்குவர்; அவற்றுள் ஒன்றை அச்சிறுவனைக் கொண்டு எடுப்பிப்பர்: அதனைக் கிராமக் கணக்கனிடம் தருவர். அவன் தன் கையில் ஒன்றுமில்லை என்பதைச் சபையோருக்குக் காட்டி, அவ் வோலேயை வாங்கி, அதில் எழுதப்பட்டுள்ள பெயரை உரக்கப் படிப்பான். பின்பு அதனை அங்குள்ள பெரியோர் அனைவரும் படிப்பர். இதன் பின்னர் அப்பெயர் ஒர் ஒலையில் வரையப்படும். இங்ஙனம் தேர்ந்தெடுக்கப்பட்டவரே அக் குடும்பின் சார்பாளர் (பிரதிநிதி) ஆவர். இங்கனமே பிற குடும்புகளுக்கும் தேர்தல் நடைபெறும். இவ்வாறு தேர்ந் தெடுக்கப் பெற்றவரே சபை உறுப்பினராவர்.” -

1. உத்தரமேரூர்க் கல்வெட்டு, டாக்டர் இராசமாணிக்களுர், இரண்டாம் குலோத்துங்கன். பக். 104-5, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/142&oldid=573660" இலிருந்து மீள்விக்கப்பட்டது