உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

தமிழக ஆட்சி



சபையின் நடைமுறை

ஒவ்வொரு சபையினரும் பல குழுவினராகப் பிரிந்து நின்று கிராம வேலைகளைக் கவனிப்பர். ஒவ்வொரு குழுவும் வாரியம் எனப்படும். அவை சம்வத்சர வாரியம், ஏரி வாரியம். தோட்ட வாரியம், பொன் வாரியம். பஞ்சவார வாரியம் எனப் பல வகைப்படும். குற்றங்களை விசாரித்தலும் அற நிலையங்களை மேற்பார்வையிடுதலும் சம்வத்சர வாரியர் கடமை யாகும். வயதிலும் அநுபவத்திலும் முதிர்ந்தவரே சம்வத்சர வாரியராக இருக்கவேண்டுமென்பது விதி. ஏரி குளம் முதலிய நீர் நிலைகளைப் பாதுகாத்தலும் விளை நிலங்களுக்கு வேண்டிய அளவு நீரைப் பாய்ச்சுவித்தலும் ஏரி வாரியத்தார் தொழிலாகும். தோட்டங்கள் பற்றிய செய்திகளைக் கவனித் தல் தோட்ட வாரியர் பொறுப்பாகும். வரியாகவும் தண்ட மாகவும் வாங்கப்பட்ட காசுகளை ஆராய்வது பொன் வாரியர் கடமையாகும். ஊரில் பஞ்சம், வெள்ளத்தால் அழிவு முதலிய தீமைகள் ஏற்படின், ஊராரைக் காப்பதற்கு முன் ஏற்பாடாகக் குடி மக்களிடம் நெல் முதலிய தானியங்களை ஆண்டுதோறும் வாங்கிச் சேர்த்து வைத்தல் பஞ்ச வார வாரியர் தொழிலாகும். இச்சபையினர் பெரு மக்கள்’ ஆளுங் கணத்தார் எனவும் பலவாறு அழைக்கப்பட்டனர். இவர்களது ஆட்சிக்குரிய விடுதி ஒன்று ஊரில் இருந்தது.

அவ்விடுதியில் ஊரைப்பற்றிய கணக்குகளே எழுதிப் பாதுகாத்தவன் கரணத்தான் எனப்பட்டான். சபையார் விரும்பும் பொழுது இவன் நேரில் இருந்து கணக்கைக் காட்டுதல் வேண்டும். சில பெரிய மன்றங்களில் மத்தி யஸ்தன் என்று ஒருவன் இருந்தான். அவன் மன்ற நட வடிக்கைகளே எழுதுபவனாக இருந்திருக்கலாம். சாதாரண

1. டிெ பக். 106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/143&oldid=573661" இலிருந்து மீள்விக்கப்பட்டது