138
தமிழக ஆட்சி
,
மாகும். இவர்கள் பிராமணர் அல்லாதராதலின், வேத நூல் கல்வி வற்புறுத்தப்படாமல் இருந்திருக்கலாம். கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் சாத்த மங்கலம் என்ற சிற்றுாரில் இந்துக்களுக்கு ஒரு மன்றமும் சமணருக்கு ஒரு மன்றமும் இருந்தன. ஊரில் இரு சமயத்தவர் எண்ணிக்கை ஒரளவு அதிகமாக இருப்பின், இரண்டு மன்றங்கள் தனித்தனியே இருந்து செயலாற்றி வந்தன என்பது இதல்ை தெரிகிறது. ஊரவையார் கணம், ஆளுங்கணம், ஊர் ஆள்வார் என்று பெயர் பெற்றிருந்தனர். தண்டல், நியாயத்தார் என்ற பெயர் கொண்ட அலுவலர் ஊர் மன்றத்தில் வேலை பார்த்தனர் என்று கருதலாம். ஊரார் செலுத்த வேண்டிய வரிகளைத் தண்டல் செய்தவர் தண்டல் எனப்பெயர் பெற்றனர்: வழக்கு களைக் கவனித்து ஊரவையார் சார்பில் நியாயம் வழங்கியவர் நியாயத்தார் எனப்பட்டனர் போலும் இவர் அரசாங்க அதி காரியாகவும் இருக்கலாம்.
ஆட்சி மன்ற வேலைகள்
(1) ஊர் மக்களுள் பெரும்பாலருக்கு நிலம் இருந்ததால் அவர்கள் அனைவரும் ஊர் நலனைக் கருதும் ஊர் அல்லது சபை: நடவடிக்கைகளில் ஒத்துழைத்தனர். ஊரார் நிலங்களுக்குத் தேவைப்படும்போது ஊர் அல்லது சபை விதித்த வரி ஒன்று; அரசாங்கம் விதித்த நிலையான வரி ஒன்று. ஊர் அல்லது சபை விதித்த வரியைத் தள்ளும் அல்லது குறைக்கும் உரிமை ஊர் அல்லது சபைக்கு உண்டு. இத்தகைய உரிமை உடைமையால் ஊர் அல்லது சபை வரி வசூலில் சில சட்டங்களை ஏற்படுத் தவும் உரிமை பெற்றிருந்தது. சட்டங்களைப் பின்
I. A. R. E. 1913, para 23 2. 465 of 1912 3. 58 of 1898, 40 of 1895, 610 of 1902, S. I.I. viii. 207