உள் ஆட்சி
139
பற்றி வரிசெலுத்தாதவர் ஒரு நாளைக்கு ஒரு மஞ்சாடிப் பொன் தண்டம் விதிக்கப்பட்டனர் என்று நின்றவூர்க் கல் வெட்டுத் தெரிவிக்கிறது. உரிமையாளர் இல்லாத நிலங்கள் மன்றத்தைச் சேர்ந்தன. அந்நிலங்களுக்கு உரிய கடமை, குடிமை என்ற வரிகளை மன்றம் அரசாங்கத்திற்குச் செலுத் தியது. வரி வசூலிக்கும் உரிமையைச் சில ஊர் மன்றங்கள் கோவில் ஆட்சியாளரிடமும் ஒப்படைத்தன.”
(2) ஊரில் உள்ள அறநிலையங்களே மேற்பார்த்தலும் மன்றத்தார் கடமை. சில ஊர்களில் மன்றத்தின் ஒரு பிரிவினரான தரும வாரியர் அவற்றைக் கவனித்து வந்தனர்.
)ே சபை சில சமயங்களில் அரசன் ஆணையைச் செயற். படுத்த, அவனது பிரதிநிதியாக அவ்வூரிலிருந்த அதிகாரியுடன் ஒத்துழைப்பதும் உண்டு. சபை அவ்வதிகாரியுடன் கலந்து, ஊர்ச் செயல்களைக் கவனிப்பதும் உண்டு.”
(4) ஊர்க் காவலர் (பாடி காவலர்) கோவிற் காவல ாாகவும் மன்றத்தார் மேற்பார்வையில் பணி செய்து, வந்தனர்.”
(5) வயல்களின் எல்லை பற்றிய சண்டைகளை மன்றத்தார். விசாரித்து முறை வழங்குதல் வழக்கம், .
1. 176 of 1929 — 30 2. 224 of 1917 321 of 1910 S. 1. I. III. 6 330 of 917 207 of 1925