உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

தமிழக ஆட்சி



(6) குற்றவாளிகளின் நிலங்களைக் கைப்பற்றும் உரிமை மன்றங்களுக்கு உண்டு; அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங் களே மன்றத்தார் அவ்வூர்க் கோவிலுக்கு அளித்து விடுவர்.”

(7) ஊரவையாரே நடு அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்து மன்றத்தில் பணியாற்றவும் வாய்ப்பு உண்டு. முதலாம் இராசராசன் ஆணைப்படி வீரநாராயண சதுர்வேதி மங்கலச் சபையார், அரசனல் துரோகிகள்’ என்று குறிக்கப் பட்டவர் நிலங்களைப் பறிமுதல் செய்தனர்.

(8) ஊரில் வசூலாகும் பணத்தில் கோவிலுக்கென்று :நடு அரசாங்கம் ஒதுக்கிய தொகையை மன்றம் கோவிலுக்குச் செலுத்தி வந்தது; கோவிலுக்கு வேண்டிய பணி மக்களையும் சில சமயங்களில் உதவி வந்தது. முதற் குலோத்துங்கன் காலத்தில் திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலச் சபையார் கூடித் திருநாராயண பட்டன் எழுதிய ‘குலோத்துங்க சோழ சரிதை’ என்ற நூலைப் படிக்கக் கேட்டு, அவனுக்கு நிலம் வழங்கினர்.4

(9) மன்றத்தில் கரணத்தான், மத்தியஸ்தன் என்று சில அலுவலரும் வேலை பார்த்தனர். மன்ற நடவடிக்கைகளே எழுதி வந்தவன் மத்தியஸ்தன் ஆகலாம். ஊர்க் கணக்கு களை வைத்திருந்தவன் கரணத்தான் ஆவன். சில சபைகளில் இந்த இருவர் வேலைகளையும் ஒருவனே கவனித்தான்.

சில ஊர்களில் வீரர்களே தங்கியிருந்தனர். அவை

1. 179 of 1912 2. 244 of 1917 . 3. S. I. I. II. 4, 5, 70 4, 198 of 1919

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/147&oldid=573665" இலிருந்து மீள்விக்கப்பட்டது