உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் ஆட்சி 14瓊

படைப்பற்று எனப்பட்டன. அத்தகைய ஊர்களின் ஆட்சியைப் படைவீரர் குழுவினரே கவனித்து வந்தனர்.

நாடு - -

‘நாடாக இசைந்த நாட்டோம் என்று கல்வெட்டில் வருவ தால், காடு என்பது பலரைக்கொண்ட ஒரு பேரவை என்று. எண்ணுதல் தகும். நாட்டைச் சேர்ந்த ஒவ்வோர் ஊரிலு: மிருந்து ஒரு பிரதிநிதி நாடு என்னும் பேரவையில் இடம் பெற்றிருக்கலாம், அல்லது அது செல்வாக்குள்ள பெருமக் களைக் கொண்ட பேரவையாக இருக்கலாம்.

தொழில் சங்கங்கள்

பண்டைக் காலத்தில் இன்னின்ன சாதியார் இன்னின்ன தொழில்களைத்தான் செய்யவேண்டும் என்ற வ்ரையரை பெரும்பாலும் வழக்கில் இருந்தது. நெசவாளர், ஆடைக்குச் சாயம் இடுபவர், தையற்காரர், தேவாங்கர், பாஞ்சாளத் தார் (இரும்புக் கொல்லர், பொற் கொல்லர், கன்னர், தச்சர், சிற்பிகள்), குயவர், செக்கார், (எண்ணெய் ஆட்டுபவர்), செருப்புத் தைப்பவர், இடையர், வேடர், வண்ணுர், நாவிதர் என்பவர் தனித்தனித் தொழிற் சங்கங்களே வைத்திருந்தனர். இவ்வாறே பட்டு நெசவாளர், கோணி செய்பவர், கூடை முடைபவர், உப்பெடுப்பவர், முதலியோரும் தனித்தனிச் சங்கங்களை வைத்திருந்தனர். , , . -

வெள்ளாளர் சங்கம் சித்திரமேழி எனப்பெயர் பெற்றது. அதன் உறுப்பினர் சித்திர மேழிப் பெரிய நாட்டார், பூமி. புத்திரர், நாட்டு மக்கள்,’ எனப் பெயர் பெற்றனர்.

1. S. I. polity, p. 368 2. A. R. E. 1918,paras 84 & 85 3. S. I. I. V. 423, 433, 447, 627

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/148&oldid=573666" இலிருந்து மீள்விக்கப்பட்டது