142
தமிழக ஆட்சி
இச்சங்கத்தார் இருந்த பல கிராமங்கள் சேர்ந்த பகுதி “சித்திர மேழிப் பெரிய நாடு எனப்பட்டது. தனி ஊர்கள் சித்திரமேழி நல்லூர், சித்திரமேழிவிடங்கர் எனப் ೧uut பெற்றன. தமிழரசர் இச்சங்கத்தை நன்கு ஆதரித்தனர். இச்சங்கத்தார் தானிய உற்பத்தியையும், பங்கீட்டையும் கவனித்தனர் என்று கருதலாம்.’
இங்ஙனம் ஒவ்வொரு வகைத் தொழிலாளரும் ஒரு சங் கத்தை அமைத்துச் சில சட்டதிட்டங்களே அமைத்துக் கொண்டனர், ஏன்?
சங்க உறுப்பினர் எல்லோருக்கும் ஏறத்தாழச் சமமாகத் தொழில் நடைபெற வேண்டும் என்பதற்கு அரசாங்கத்தை வேண்டித் தொழில் சலுகைகள் பெறுவதற்கு இச்சங்கங்கள் பயன்பட்டன. சில ஊர்களில் வாழ்ந்த பொற்கொல்லர் இரட்டைச் சங்கு ஊதுவதற்கும் வீட்டுச் சடங்குகளின்போது வாத்தியங்களே முழக்கவும், செருப்பணிந்து போகவும், தங்கள் வீடுகளுக்குக் காரை பூசவும் உரிமை பெற்றனர் என்று ஒரு கவ்வெட்டுக் கூறுகிறது.’ இவ்வாறே நெசவாளர் முதலி யோரும் அரசாங்கத்திடம் விண்ணப்பித்துச் சில சலுகைகள் பெற்றனர். இத்தொழிற் சங்கங்கள் தொழில் செய்வோருக்கு வேண்டிய சமுதாய கவுரவத்தைப் பெற முனைந்ததோடு, சமய வளர்ச்சிக்கும் பாடுபட்டன என்பது சில கல்வெட்டுக் - களால் தெரிகிறது,
1, 177 of 1900, 21 of, 1903, 209 of 1937, 16 of 1911,
215 of 1930. 75 of 1903. - 2. 151 of 1905; S. I. I. III. 25; S. I, I V. 238. 3. A. R. E. 1918, para 70.