பக்கம்:தமிழக ஆட்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தமிழக ஆட்சி



விக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள நாயக்கர் கால ஓவியங்கள் அரசருடைய ஆடை அணி ‘களேம் பற்றிய விவரங்களை ஒரளவு நமக்கு உணர்த்துகின்றன.

தமிழரசர் ஒருவரை ஒருவர் பழி தீர்த்துக்கொண்ட காரணத்தால், அவர்கள் கட்டுவித்த அரண்மனைகள் இன்று காணுமாறு இல்லை. கி. பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் கட்டப்பெற்ற தஞ்சை-மகாராட்டிரர் அரண்மனை ஒன்றே நாம் காணத்தக்க நிலையில் இருக்கின்றது. ஏழடுக்கு மாளிகை, கொலுமண்டபம், ஆயுத சாலை, சங்கீத மகால், சரசுவதி மகால், இருட்டு மகால், அந்தப்புர மாளிகைகள், செய்குளம், பெரிய தோட்டம் ஆகிய அனைத்தும் அரண்மனையுள் அமைந்திருக்கின்றன. இந்த அரண்மனையைக் கொண்டு, பண்டைக்கால அரண்மனைகள் எவ்வாறு இருந்தன என்பதை நாம் ஒருவாறு ஊகிக்கலாம். சிற்றரசர் அரண்மனைகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிந்து கொள்ளப் புதுக்கோட்டை, இராமநாதபுரம், எட்டயபுரம் முதலிய இடங்களில் உள்ள அரண்மனைகள் பெருந்துணை புரிகின்றன.

பண்டை அரசருட் சிலர் மலைமீது கோட்டை கட்டி எங்ஙனம் வாழ்ந்தனர் என்பதை அறிய, அழிந்து பட்ட செஞ்சிக்கோட்டை ஓரளவு துணை செய்கின்றது. சமதரையில் கோட்டையின் அமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை அறிய வேலூர்க்கோட்டை உதவுகின்றது.

(6) வழக்கில் உள்ள சான்றுகள்

மாமல்லபுரம் (மகாபலிபுரம்) என்பது, மகாமல்லன் (மாமல்லன்) என்ற விருதுப் பெயரைப் பெற்ற முதல் நரசிம்மவர்மனது பெயரைத் தாங்கி நிற்பது. பெரு வீரனான இரண்டாம் புலிகேசி என்ற சாளுக்கிய வேந்தனை வெற்றி கொண்ட காரணத்தால், முதலாம் நரசிம்மவர்மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/15&oldid=510568" இலிருந்து மீள்விக்கப்பட்டது