பக்கம்:தமிழக ஆட்சி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் ஆட்சி 1.43

جمبو محسعواصم

கருவூரில் வாழ்ந்த இடையர்கள் தங்கள் பிள்ளைகளின் சாந்தி முகூர்த்தத்தின் போது ஒர் ஆட்டை உள்ளூர்க் கோவிலுக்கு வழங்குவதென்று முடிவு செய்தனர்; இவ்வாறே தங்கள் பெண்கள் கணவரோடு குடித்தனம் செய்யத் தொடங்கும் பொழுதும் ஒர் ஆட்டை ஊர்க் கோவிலுக்குத் தானம் செய்தனர்; சங்கத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினன், தான் ஒப்புக்கொண்ட கடமையை நிறைவேற்றத் துணையிருந் தனர்; அவன் செய்யத் தவறினால், தாங்கள் செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.”

வணிகர் சங்கங்கள்

வலஞ்சியர், நாளு தேசிகன், நகரம், வைசிய வாணிய நகரத்தார், வைசியர், செட்டிகள், மணிகிராமம், நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பெயர்களில் வணிகர் சங்கங்கள் பணியாற்றின. இவைகளைப் போலவே குதிரைச் செட்டிகள் சங்கம், சாலியர் சங்கம் எனச் சில சங்கங்களும் இருந்தன. குதிரைச் செட்டிகள் மலே நாட்டிலிருந்து வந்தன ராம். கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மார்க்கோபோலோ என்ற மேலே நாட்டார் ஒருவகை வணிகரைப்பற்றிப் பின்வருமாறு வியந்து கூறியுள்ளார்: “இவ்வணிகர் பொய்யுரையாதவர்; களவு செய்யாதவர்; அடுத்தவரைக் கெடுக்காதவர்; குடியும் இறைச்சியும் உட்

1. 165 of 1936-37. S. I. I. 1II. 18. 2. 181 of 1926. - -

மாணிக்கவாசகருக்காக வந்த குதிரை வாணிகர் மலைநாட்டிலிருந்து வந்தனரென்றே வரலாறு

“குதிரையைக் கொண்டு குடா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்” -திருவாசகம், கீர்த்தித் திரு அகவல்.வரி 27.28.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/150&oldid=573668" இலிருந்து மீள்விக்கப்பட்டது