பக்கம்:தமிழக ஆட்சி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் ஆட்சி

145



உட்பிரிவுகள் இருந்தன. அவர்கள் பல நாடுகளில் சுற்றி நிலவழியாலும் கடல் வழியாலும் ஆறு நாடுகளில் நுழைந்த தாகக் கூறியுள்ளனர். அவர்கள் சையாம், சுமத்திரா, பர்மா, இலங்கை நாடுகளிலும் வாணிகம் செய்தனர்.

இச்சங்கத்தின் தலைமையிடம் தக்கணத்தில் ஐஹொளே என்ற ஊரில் இருந்தது. அதனால் இச்சங்க உறுப்பினர் ‘ஐயவளெபுர பரமேசுவரி மக்கள் எனப்பட்டனர். இவர்கள் பலமொழி பேசுவோர்; பல நாட்டினர், இவருள் சுதேசி வணிகர், பரதேசி வணிகர், நாளுதேசி வணிகர் என்று முப் பெரும் பிரிவினர் இருந்தனர். இவர்கள் நெல் முதலிய தானிய வகைகளையும் மிளகு, எள், பாக்கு, குதிரைகள், யானைகள், நவரத்தினங்கள் முதலிய எல்லாப் பொருள்களையும் கொண்டு வாணிகம் செய்தனர். இவர்கள் சங்கவேலைகள் ‘ஐநூற்றுவர் அடங்கிய சபையால் செயற்படுத்தப்பட்டன என்று கொள்ளலாம். இச்சபையர் காட்டுர் என்ற ஊரை ‘iரபட்டணம் எனப் பெயர் மாற்றினர்; நாட்டாரைக் கொண்டும் நகரத்தாரைக்கொண்டும் ஒரு கிராமத்தை வணிகர் கிராமமாக மாற்றிக்கொண்டனர். இத்தகைய வணிகர் கிராமங்களில், சபையாரைப் போலவே, ஊராட்சி நடத்தினர்; பிற ஊர்களில் கோவில் திருப்பணிகளும் பிற அறங்களும் செய்தனர். சங்கத்து ஒவ்வோர் உறுப்பினரும் சில சமயங்களில் சங்க நிதிக்காக ஆண்டு தோறும் குறிப் பிட்ட தொகையைச் செலுத்தி வந்தனர்; சில சமயங்களில் தாங்கள் விற்ற பொருள்களின் அளவுக்கேற்றவாறு குறிப் பிட்ட தொகையைக் கொடுத்து வந்தனர். சில சமயங்களில் தங்கள் இலாபத்தில் ஒரு பகுதியை அறத்திற்குப் பயன் படுத்தினர். -- - - - ** * இச்சங்கத் தலைவன் நானதேசித் தலைவன், பட்டன. சுவாமி, பட்டணக்கிழார், தேசிகன் தண்ட நாயகன் எனப்.

1. A. R. E. 1913, Para 25 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/152&oldid=573670" இலிருந்து மீள்விக்கப்பட்டது