பக்கம்:தமிழக ஆட்சி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

தமிழக ஆட்சி



பல பெயர்களைப் பெற்றிருந்தான். நாடு சுவாமி, மணி காரர், பல கடைகளை மேற்பார்க்கும் அதிகாரி எனப் பல அதிகாரிகள் இச் சங்கத்தில் பணியாற்றினர்.

இச்சங்க உறுப்பினர் மிகுந்த ஒற்றுமையுடன் பணி செய்தனர். தன் வருமானத்தை மறைத்த உறுப்பினன் கடவுளுக்கும் அரசனுக்கும் இனத்துக்கும் துரோகி என்று பழிக்கப்பட்டான். இதன் உறுப்பினர் நகரத்தார் என்றும் அழைக்கப்பட்டனர். எனவே, இவரது வணிகர் சங்கம் நகரம் எனவும் பெயர் பெற்றது. சபையின் உட்பிரிவுகளைப் போலவே நகரமும் பல வாரியங்களைப் பெற்றிருந்தது. நகர கரணத்தார், நகர மத்தியஸ்தர் என்ற அலுவலர் நகரத்தில் வேலை செய்தனர்.”

நமது தமிழகத்தில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் இத்தகைய கட்டுப்பாடுகளோடு சிறந்த முறையில் வாணிகம் செய்து வருபவரும், கோவில் திருப்பணிகளில் அளவற்ற ஊக்கம் காட்டி வருபவரும் தனவைசியரே யாவர். இவர்கள் இன்று நகரத்தார் என்று வழங்கப் படுகின்றனர். இவர்கள் 96 நகரங்களை அமைத்துக் கொண்டு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சிலப்பதிகார காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்ததாகவும், அந்நகரம் கடல் கொந்தளிப்பில் அழிந்தபோது திருச்சிராப்பள்ளி-புதுக் கோட்டைப் பகுதிகளில் குடியேறியதாகவும் கூறுகின்றனர்.

வேந்தன்பட்டி முதலிய நகரங்களில் வாழ்கின்ற நகரத் தாருள் ஒரு சாரார் தம் திருமண இதழ்களின் தொடக் கத்தில் ‘ஐந்நூற்றீசர் திருவருளே முற்கொண்டு’ என்னும் தொடரை அச்சிட்டு வருகின்றனர். நகரத்தார் ஏழு கோவில் களைச் சேர்ந்தவர். அவருள் ஐந்நூற்றிசரை வழிபடுவர் மாத்துார்க் (மாற்றுார்?) கோயிலார் என்பது தெரிகிறது. உறையூர், அரும்பாக்கூர், மண்ணுரர். மணலூர், கண்ணுார்,

1. S. 1. Polity, pp 360-394

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/153&oldid=573671" இலிருந்து மீள்விக்கப்பட்டது