பக்கம்:தமிழக ஆட்சி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

தமிழக ஆட்சி



பெருகின. எனவே, இவற்றைக் கவனித்துப் பாதுக்காக்கவும், நிலங்கள் முதலியவற்றைக் குத்தகைக்குவி ட்டு வசூலிக்கவும், கோவில் பரிவாரத்தார் அனைவர் வேலைகளையும் மேற்பார்க் கவும் ஆட்சிக்குழு தேவைப்பட்டது, ஆட்சிக் குழுவிற்கு அடங்கிய கணக்கர் முதலிய அலுவலர் தேவைப்பட்டனர். கோவில் வேலைகளைக் கவனிக்கப் பலர் நியமனம் பெற்றனர். அவர்களுக்கெல்லாம் நிலங்கள் மானியமாக விடப்பட்டன.

கோவில் ஆட்சி

செய்யூர், பெரியபாளையம், அகத்தியான் பள்ளிக்கோவில் போன்ற சிறிய கோவில்கள் அர்ச்சகர் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தன. மாகேசுவரர் என்ற சைவத்துறவிகள் ஆட்சியில் சில கோவில்கள் இருந்தன. திருக்களர் கோவில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் ஆண்டார்கள் ஆட்சி யில் இருந்தது; மூன்றாம் இராசராசன் காலத்தில் மகேசுவரர் ஆட்சிக்கு மாற்றப்பட்டது. சில கோவில்கள் கோவிலைச் சார்ந்த மடத்துத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தன. சில கோவில்கள் ஊரவையர் மேற்பார்வையில் இருந்தன.” நடுத்தர வருவாயுள்ள பெரியகோவிலில் கோவிலுக்கென்றே தனி ஆட்சிக்குழு இருந்தது. அக்குழுவினர் பூர் காரியம் செய்பவர், கோவில் கணப்பெருமக்கள், பாத மூலத்தார்” எனப்பலவாறு பெயர்பெற்றிருந்தனர்.

அக்குழுவினருள் ஊரவையார், ærGತಹTat, فلسامر (இருப்பின் அதன்) தலைவர் என்பவர் இடம் பெற்றிருந்

1. 449 of 1902, 309 of 1908, 505 of 1904.

2. 480 of 1922. 3. S. I. I. III. 260. 4

... 101, 121 of 1925. - . 362 of 1917, 160 of 1929, 332 of 1910. 6. S. I. I. VI 323, 206 of 1915, S. I. I.ʻ V. 686.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/155&oldid=573673" இலிருந்து மீள்விக்கப்பட்டது