பக்கம்:தமிழக ஆட்சி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

தமிழக ஆட்சி


.

மறைந்தன. இதற்கு உரிய காரணங்கள் யாவை? (1) கி. பி.

14ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் படையெடுப்பினால் நாடு அமைதியை இழந்தது சிறந்த காரணமாகும். (2) பின் வந்த விசயநகர ஆட்சியில் சிற்றரசர் (நாயக்கர்) ஆட்சி மிகுந்தமை

யும், படை அடிப்படையில் நாடு ஆளப்பட்டமையும்

மற்றாெரு காரணமாகும். (3) கிராமத்தில் அரசாங்க அதி காரிகளை நியமித்து அவர்களைக் கொண்டே கிராம நடவடிக்

கைகளை நடைபெறச் செய்தமை மற்றாெரு காரணமாகும்,

(4) தமிழகத்தை ஆண்ட சுல்தான்கள் பல்லவரைப் போலவும்

சோழரைப் போலவும் கிராம ஆட்சி மன்றங்களில் மிகுந்த

கவலை காட்டாமை வேறொரு காரணமாகும். இத்தகைய பல காரணங்களால், பல நூற்றாண்டுகளாக நன்முறையில்

நடைபெற்று வந்த சபைகளும் ஊர் மன்றங்களும் கோவிலாட்சி மன்றங்களும் சோழர்க்குப்பின் சீரழிந்து மறைந்தன.”

1. S. I. polity, pp. 270–372.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/159&oldid=573677" இலிருந்து மீள்விக்கப்பட்டது