உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தமிழக ஆட்சி



நிலத்தைக் குறித்தது என்று உரையாசிரியர்கள் பொருள் கொண்டனர்.

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள ”

என்று வரும் சிலப்பதிகார அடிகளால், இன்றைய குமரி முனைக்குத் தெற்கே குமரியாறு பாயப்பெற்ற பெருநிலப் பகுதி இருந்தது என்பது தெரிகிறது. அதன்கண் ஏழ்பனைகாடு, ஏழ்தெங்கநாடு என நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறியுள்ளனர். அந்த நிலப்பகுதியில்தான் பாண்டியர் தலைநகரமான மதுரை இருந்தது, அதன்கண் முதற்சங்கம் நிகழ்ந்தது என்று இறையனர் களவியல் இயம்புகின்றது.

அந்நாடு அழிந்த பின்பு கிழக்குக்கரை ஓரத்தில் இருந்த கபாடபுரம் என்பது பாண்டியர் தலைநகரமாயிற்று. அங்கு இடைச் சங்கம் இருந்தது. அதுவும் கடல்கோளால் அழிந்தது. இஃது இறையனர் களவியல் கூறும் செய்தி.

இங்ஙனம் கபாடபுரமும் அழிந்த பிறகுதான் இன்றைய மதுரை பாண்டியர் தலைநகரம் ஆயிற்று. அப்பொழுதுதான் இன்றைய குமரி முனை தமிழகத்தின் தென் எல்லை ஆயிற்று. ஏறக்குறைய 1800ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிறு காக்கை பாடினியார் என்ற பெண்பாற் புலவர், வடக்கில் வேங்கடத்தையும் ஏனைய மூன்று பகுதிகளில் கடலையும் எல்லையாகக் கூறினர். இதனால், கடைச் சங்ககாலத்துத் தமிழகத்தின் தென் எல்லை குமரிமுனை என்பது பெறப்பட்டது.

மூன்று தமிழ் நாடுகள்

சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்பவை தொன்று தொட்டு இருந்து வரும் மூன்று நாடுகளாகும். இவற்றுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/19&oldid=504906" இலிருந்து மீள்விக்கப்பட்டது