தமிழகம்
13
சேர நாடு என்பது, இன்றைய கொச்சி - திருவாங்கூர் நாடு களுடன் மலையாள மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதியாகும். சோழ நாடு என்பது, சிதம்பரத்திற்கு வடக்கேயுள்ள வெள்ளாற்றை வட எல்லையாகவும் புதுக்கோட்டைக்கு அருகே யுள்ள தென் வெள்ளாற்றைத் தெற்கெல்லேயாகவும் கொண்டுள்ள நிலப்பகுதியாகும். அஃதாவது, இன்றைய தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களிலும் தென் ஆற்காடு மாவட்டத்தின் தென்பகுதியிலும் உள்ள நிலப்பகுதியாகும். பாண்டிய நாடு என்பது. இன்றுள்ள மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்ட நிலப் பகுதியாகும்.
சிற்றரசுகள்
சோழ நாட்டிற்கு வடக்கே திருக்கோவலூரைத் தலை நகராகக்கொண்டு மலையமான்கள் ஒரு சிறு நிலப்பகுதியை ஆண்டுவந்தனர். அப்பகுதிக்கு வடக்கே இருந்த தொண்டை. நாட்டில் திரையர்கள் என்ற தொண்டைமான்கள் ஆண்டு வந்தனர். தகடுரைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டின் ஒரு பகுதியை அதியமான்கள் ஆண்டுவந்தனர். இவ்வாறே கொங்கு நாட்டில் ஒரி, குமணன் முதலிய சிற்றரசர்கள் சிறு நிலப்பகுதிகளே ஆண்டுவந்தனர். பறம்பு, மலைநாட்டைப் பாரி ஆண்டுவந்தான். பழநிமலைப் பகுதியை வேள் ஆவி ஆண்டுவந்தான். பொதிய மலை நாட்டை வேள் ஆய் ஆண்டுவந்தான். இவ்வாறு தமிழகத்திலிருந்த சிற்றரசர் பலராவர். இவர்கள் முடியரசர்க்கு அடங்காமல் வாழ்ந்த, காலமும் உண்டு; அடங்கி வாழ்ந்த காலமும் உண்டு.
மூன்று காட்டு விவரங்கள்
சங்ககாலம் பரந்து பட்ட காலம். அக்காலத்தில் ஒரு சமயத்தில் மூவேந்தருள் சேரன் சிறப்புற்றிருந்தான்; மற். றொரு சமயத்தில் சோழன் மேம்பட்டு விளங்கினன்; வேறொரு