18
தமிழக ஆட்சி
‘ படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.”
- கெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; யானுயிர் என்ப தறிகை வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே ‘
என்று புறநானூற்றுப் பாடல் புகல்கின்றது.”
இதல்ை குடிகளுக்கு அரசனே உயிர் என்று பண்டை மக்கள் கருதினர் என்று கொள்ளலாம். அரசனிடம் கல்வி யறிவு, அஞ்சாமை, நுண்ணறிவு, சோம்பலின்மை, செயல் படு திறமை முதலிய பண்புகள் எதிர்பார்க்கப்பட்டன.
“ அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. ‘
“ தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலளுள் பவர்க்கு. ”
‘ மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. ”
‘அரசன் ஆட்சி முறைக்குரிய அறத்தில் தவறலாகாது: அறமல்லாதவற்றை நீக்கவேண்டும்; வீரத்தில் மானவுணர்ச் சியோடு இருத்தல் வேண்டும்; காண்பதற்கு எளியவளுய்க் கடுஞ்சொல் கூருதவளுய் இருக்கவேண்டும்; இனிய சொற். களைப் பேசவேண்டும்; பொருள் வரும் வழிகளே மேன்மேலும் பெருக்கவேண்டும்; வந்த பொருள்களைச் சேர்க்க வேண்டும்: சேர்த்தவற்றைக் காக்க வேண்டும்; காத்தவற்றைப் பல துறைகளுக்காக வகுக்க வேண்டும் வகுத்தவற்றை முறைப் படி செலவு செய்யவேண்டும்; நீதிமுறை தவருது குடிகளைக் காக்கவேண்டும்; புறங்கூறுவோரின் சொற்களைப் பொறுமை
1. செ. 186