உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசுரிமை

21



யோசனைகளைக் கேளாமல் நெறி தவறும்போது, குடிமக்கள் கலகம் விளைத்து அவனே நெறிப்படுத்துதல் வழக்கம்.

அரசியலில் ஊர், சபை, நாடு என்ற ஆட்சி மன்றங்கள் இருந்தன. மறையவர் வாழ்ந்த சிற்றுார்களில் இருந்த ஆட்சிமன்றம் சபை எனப் பெயர் பெற்றது. பிற கிராமங் களில் இருந்த ஆட்சி மன்றங்கள் ஊர் எனப் பெயர் பெற்றன. ஒவ்வோர் ஊரிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அறிஞர்கள் கூட்டமாக இருந்து ஊராட்சியை நடத்தி வந்தனர். பல ஊர்கள் சேர்ந்தது ஒரு நாடு. நாட்டாட்சி மன்றத்தில் எல்லா ஊர்ச் சார்பாளரும் (பிரதிநிதிகளும்) இடம் பெற்றிருந்தனர். இவை தத்தம் பகுதிக்குரிய ஆட்சியை நன்கு கவனித்து வந்தன. நடு அரசாங்கம் இவற்றின் வேளைகளில் தலையிடுவதில்லை; ஆயினும், பொதுவாக மேற்பார்வையிட்டு வந்தது. இம் மன்றங்கள் தத்தம் சூழ்நிலைக்கேற்பச் சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டு செயற்பட்டன.

மேலே கூறப்பெற்ற ஐம்பெருங்குழு, எண்பேராயம், புலவர் குழாம், பலவகை ஆட்சி மன்றங்கள் என்பவை அரசனது விருப்பப்படி ஆணை செலுத்துவதைக் கட்டுப் படுத்தி வந்தன என்று கூறலாம்.

அரசன் கடமைகள்

உள்நாட்டில் அமைதியைக் காத்தலும் வெளியார் படையெடுப்புக்களிலிருந்து நாட்டைப் பாதுகாத்தலும் அரசனுடைய சிறப்புக் கடமைகளில் முதலிடம் பெறத் தக்கவை. உள்நாட்டில் அமைதியைக் காக்க ஊர்தோறும் ஊர்காப்பாளர் படை (Police) இருந்து வந்தது. அப்படை பகலிலும் இரவிலும் ஊரைப் பாதுகாத்து வந்தது. அப் படையினரே கள்வரையும் பிடித்து வந்தனர். அவர்களுடைய திண்ணிய உடலமைப்பும், திறமையும் சிலப்பதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/28&oldid=505221" இலிருந்து மீள்விக்கப்பட்டது