பக்கம்:தமிழக ஆட்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழக ஆட்சி



காரத்தில் விளக்கப்பட்டுள்ளன. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை என்பன வெளியார் படையெடுப்பை எதிர்த்து நிற்க அமைந்தவையாகும்.

குடிமக்களின் உயிரையும் உடைமையையும் பாது காப்பது அறம் எனப்பட்டது. அறத்தைப் பாதுகாப்பது அரசனது கடமை. அறம் என்பது சமுதாய ஒழுங்காகும். வாழையடி வாழையாகச் சமுதாயத்தில் இன்னர் இன்னதைச் செய்யவேண்டும்-இவர் இவரிடம் இன்ன இன்னவாறு நடந்துகொள்ளவேண்டும் என்று நெடுங்காலமாக இருந்து வரும் திட்டமே சமுதாய ஒழுங்கு எனப்படும். அதுவே தர்மம் என்றும் சொல்லப்படும். இந்த நாள்பட்ட திட்டம் சிறிது தவறுமாயினும், சமுதாய அமைப்புக்கெடும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்து வந்தது. அதனுல் அதனேக் காப்பது அரசனது தலைசிறந்த கடமையாகக் கருதப்பட்டது. அரசனது செங்கோலே இத்தகைய அறத்திற்கு அடிப்படை என்பது வள்ளுவர் கருத்து. சமுதாய ஒழுங்கை நிலைநாட்டியவனே செங்கோல் அரசன் என்று போற்றப்பட்டான்.

“அரசன் எவரிடத்திலும் கண்ணுேட்டம் செய்யாமல், குற்றத்தை ஆராய்ந்து, நடுவுநிலைமை பொருந்திச் செய்யத் தக்கதை ஆராய்ந்து செய்யவேண்டும். அரசன் குடிகளை அன்போடு அணைத்துக்கொண்டு செங்கோல் செலுத்த வேண்டும். நெறி தவருத ஆட்சியே அரசனுக்கு வெற்றியைத் தரும் படைவன்மை வெற்றியைத் தராது, அரசன் குடிகளை வரவேற்று அவர்தம் குறைகளைக்கேட்டு முறை செய்யவேண்டும்; குடிகளைப் பிறர் வருத்தாமல் காக்க வேண்டும்; தானும் வருத்தலாகாது; அவர்தம் குற்றங் களுக்குத் தக்க தண்டனை விதிக்க வேண்டும். பயிரைக் காக்கக் களையை நீக்குதல் போல நல்ல குடிமக்களைக் காக்கக் கொடியவர் சிலரைக் கொலைத் தண்டனையால் ஒழிக்க வேண்டும். இவை எல்லாம் அரசன் கடமைகள்,” என்பது வள்ளுவர் வாக்கு, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/29&oldid=505222" இலிருந்து மீள்விக்கப்பட்டது