அரசுரிமை
23
குடிகளிடம் பழங்கால முதல் நிலவிவரும் பழக்க வழக்கங்கள் ஒழுக்கமுறைகள் இவற்றைப் பாதுகாத்தலும் “ அரசன் கடமையாகும்.
‘ அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
கின்றது மன்னவன் கோல்.”
‘அறன் இழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு “
என்பது வள்ளுவர் வாக்கு.
நாட்டுக்கும் குடிகளுக்கும் நலன் விளைய அரசன் சில வேள்விகள் செய்யவேண்டும் என்று வடமொழி அறநூல்கள் கூறுகின்றன. வடவர் செல்வாக்குத் தமிழகத்தில் பரவிய போது, தமிழ்வேந்தர் பல யாகங்களைச் செய்து, பல்யாகசால் முதுகுடுமிப் பெருவழுதி, இராய சூயம் வேட்ட பெருநற் கிள்ளி என்ற அடைமொழிகளைப் பெற்றனர். பல்லவர் காலத்தில் சிவஸ்கந்தவர்மன் என்ற பல்லவ மன்னன். அசுவமேதம், அக்கிஷ்டோமம், வாஜபேயம் என்ற வேள்விகளேச் செய்தான் என்று உதயேந்திரப் பட்டயங்கள் உரைக் கின்றன. பிற்காலச் சோழர்களில் இராசாதிராசன் காலத்தில் பரிவேள்வி (அசுவமேதம்) நடைபெற்றது. கி. பி. 17-ஆம் நூற்றாண்டில் தென்காசிப் பாண்டியன் ஒருவன் வேதவேள்வி செய்து சோமயாஜி’, ‘தீட்சிதர் என்ற பட்டங்களைப் பெற்றதாகக் கல்வெட்டு உணர்த்துகின்றது.”
1. செங்கோன்மை, 3. 5. --n. -ت.
2. இறை மாட்சி, 4. 3. R. கோபாலன், காஞ்சிப் பல்லவர், பக். 34. 4. K. A. நீலகண்ட சாத்திரி, சோழ II, பக்.220. 5. டிெ, பாண்டிய நாடு, பக். 252.