பக்கம்:தமிழக ஆட்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

தமிழக ஆட்சி



அரசன் இத்தகைய வேள்விகளைச் செய்யும் பொழுதும், தன் பிறந்த நாள் விழாவிலும், பிற சிறப்பு நாட்களிலும் பலவகைத் தானங்களைச் செய்வது வழக்கம், நாட்டு நலத் திற்கும். குடிகள் நலத்திற்கும் இவ்வாறு தானம் செய்தல் அரசனது கடமை என்பது நம்பப்பட்டது. ஒரு கல்வெட்டில் பதினறு வகை மகாதானங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவை பொன்முட்டை, பொன்னல் ஆன உலகஉருளே, பொற்குடம், நகைகள் அணியப் பெற்ற பசு, எழுகடல், கற்பக மரம், பொன் காமதேனு, பொன்னலான தரை, குதிரை பூட்டப் பெற்ற பொன்தேர், தானம் செய்பவனது நிறையுள்ள பொன், ஆயிரம் பசுக்கள், பொன் குதிரை, ஹேமகர்ப்பம் என்ற பொன் பத்திரம், பொன்னலான யானை பூட்டப் பெற்ற தேர், ஐந்து கலப்பைகள் ஆகும்.’

இவற்றுள் தன்நிறையளவு பொன்னே வழங்குதல் துலாபாரம் எனப்பட்டது. சேரன் செங்குட்டுவன் கங்கைக் கரையில் மாடல மறையோனுக்குத் துலாபார தானம் செய்தான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. அரசன் சிறந்த புலவர்க்கும் மறையவர்க்கும் சமயத் தலை வர்க்கும் நிலங்களையும் சிற்றுார்களையும் தானமாக வழங் கினன். சின்னமனூர்ச் செப்பேடும், பல்லவர், பிற்காலச் சோழர், பாண்டியர், நாயக்கர் செப்புப் பட்டயங்களும் இந்த உண்மையை உணர்த்துகின்றன. பொன்னைப்போல் வளம் கொழிக்கும் ஆற்றங்கரை ஊர்களும் இடங்களும் வேதங்களில் வல்ல மறையவர்க்கு வழங்கப்பட்டதைப் பட்டயங்கள் தெரிவிக்கின்றன. பிரமபுரி, பிரமதேசம் என்பன பிராமணருக்குத் தானம் கொடுக்கப்பட்ட ஊர் களேயாகும். மகாதானபுரம் என்ற ஊரின் பெயரும்

1. Epigraphia Indica, 1. pp. 364-368; S. I. Polity, p. 26. 2. ‘ தோடார் போந்தை வேலோன் தன்னிறை

மாடல மறையோன் கொள்கென் றளித்து’

-காதை 27, வரி 175-176.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/31&oldid=573553" இலிருந்து மீள்விக்கப்பட்டது